சென்னையில் (தமிழ்நாடு) பிக்விங் டாப்லைன் விற்பனை நிலையத்தை தொடங்கிய ஹோண்டா 2வீலர்ஸ் இந்தியா

சென்னையில் (தமிழ்நாடு) பிக்விங் டாப்லைன் விற்பனை நிலையத்தை தொடங்கிய ஹோண்டா 2வீலர்ஸ் இந்தியா
சென்னையில் (தமிழ்நாடு) பிக்விங் டாப்லைன் விற்பனை நிலையத்தை தொடங்கிய ஹோண்டா 2வீலர்ஸ் இந்தியா

சென்னையில் (தமிழ்நாடு) பிக்விங் டாப்லைன் விற்பனை நிலையத்தை தொடங்கிய ஹோண்டா 2வீலர்ஸ் இந்தியா

சென்னை, ஜூலை 19, 2021: பெரிய பிரீமியம் பைக்குகளுக்கான மாபெரும் பிரத்யேக விற்பனை நிலையமான ஹோண்டா பிக்விங் டாப்லைனை (Honda BigWing Topline) சென்னையில் (முகவரி: எண்.372, அண்ணா சாலை, மவுண்ட் ரோடு, சைதாப்பேட்டை, சென்னை -600015) இன்று தொடங்கி, #GoRidin உத்வேகத்தை மேலும் உயர்த்தியுள்ளது ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Honda Motorcycle & Scooter India Pvt. Ltd. - HMSI).

சென்னையில் பிக்விங் டாப்லைன் தொடங்கப்படுவது குறித்து ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் விற்பனை & சந்தைப்படுத்துதல் பிரிவு இயக்குனர் திரு.யத்விந்தர் சிங் குலேரியா (Mr. Yadvinder Singh Guleria, Director – Sales & Marketing, Honda Motorcycle & Scooter India Pvt. Ltd.) பேசுகையில், “வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமான, ஒரு உண்மையான, வேறுபட்ட, உன்னதமான அனுபவத்தை தரும் வகையில் ஹோண்டா பிக்விங்கை (ஹோண்டாவின் பிரத்யேக ப்ரீமியம் மோட்டார்சைக்கிள் நெட்வொர்க்) விரிவுபடுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். இன்று, சென்னையில் ஹோண்டா பிக்விங் டாப்லைன் விற்பனை நிலையத்தை தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த புதிய பிரீமியம் விற்பனைநிலையம் மூலமாக, ஹோண்டாவின் கேளிக்கைக்கான ஆடம்பர சொகுசு மோட்டார்சைக்கிள்களை சென்னையிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு எளிதில் கிடைக்குமாறு கொண்டு செல்வதே எங்களது நோக்கம்; அதோடு, எங்களது பிரீமியம் மோட்டார்சைக்கிள்களின் தயாரிப்பு வரிசைகளையும் அவர்களிடத்தில் சேர்க்கவிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

குறிப்பாக, 2020 நிதியாண்டின் இறுதியில் குர்ஹாவ்னில் தொடங்கப்பட்ட முதலாவது ஷோரூம் முற்றிலும் மாறுபட்ட வகையில் சில்வர் விங்ஸ் ஆக விரிவாக்கம் செய்யப்பட்டது; இன்று, நாடு முழுவதும் பரவலாக 50 பிக்விங் டீலர்ஷிப்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பிங்விங் டாப்லைன் (300 சிசி முதல் 1800 சிசி வரையிலான அனைத்து பிரீமியம் மோட்டார்சைக்கிள்கள் பிரிவு) மற்றும் பிங்விங் (நடுத்தர அளவிலான மோட்டார்சைக்கிளுக்கான பிரத்யேகப் பிரிவு) சில்லறை விற்பனை நிலையங்கள் அடங்கும்.

மாறுபட்ட தயாரிப்பு தொகுப்பு

மெட்ரோ நகரங்களில் உள்ள பிக்விங் டாப்லைன் மற்றும் தேவைகள் உள்ள இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பிங்விங் விற்பனை நிலையங்களால் ஹோண்டாவின் பிரீமியம் மோட்டார்சைக்கிள்களுக்கான சில்லறை விற்பனை மேற்கொள்ளப்படுகிறது. ஹைனெஸ்-சிபி350யில் (H’ness-CB350) இருந்து சிபி350ஆர்எஸ் (CB350RS), புதிய சிபி500எக்ஸ் (CB500X), சிபிஆர்650ஆர் (CBR650R), சிபி650ஆர் (CB650R), 1000ஆர்ஆர்-ஆர் ஃபயர்பிளேட் (CBR1000RR-R Fireblade), சிபிஆர்1000ஆர்ஆர்-ஆர் ஃபயர்பிளேட் எஸ்பி (CBR1000RR-R Fireblade SP), அட்வெஞ்சர் டூரர் ஆஃப்ரிக்கா ட்வின் அட்வெஞ்சர் ஸ்போர்ட்ஸ் (adventure tourer Africa Twin Adventure Sports) மற்றும் முதன்மையான மாடலான கோல்டு விங் டூர் (Gold Wing Tour) போன்ற ப்ரீமியம் மோட்டார்சைக்கிள் வகை தயாரிப்புகளின் முழுமையான தொகுப்பு ஒரு மாபெரும் இடத்தில் கிடைப்பது ஹோண்டாவின் நடுத்தர அளவிலான மோட்டார்சைக்கிள் பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

பிரீமியம் அனுபவம்

கருப்பு & வெள்ளை மோனோக்ரோமேடிக் வண்ணங்கள் (black & white monochromatic theme) கொண்டு அலங்கரிக்கப்பட்ட பிங்விங் விற்பனைநிலையத்தில் வாகனங்கள் அவற்றின் முழு சிறப்புகளோடு காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. வாடிக்கையாளர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில் நன்கு பயிற்சி பெற்ற நிபுணர்கள் பிங்விங்கில் உள்ளனர். வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பொருத்தமான வாகனம் எது என்று தேடுவதில் தொடங்கி அதை வாங்குவது வரையிலான பயணத்தை எளிதாக மேற்கொள்வதற்காகவே, அனைத்து விவரங்களையும் தெளிவாக அறிய www.HondaBigWing.in எனும் தளம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் புக்கிங் வசதியானது வாடிக்கையாளர்கள் தங்களது விரலசைவில் உடனடியான, தடையற்ற, வெளிப்படையான முன்பதிவு அனுபவம் பெறுவதை உறுதிப்படுத்துகிறது. வாடிக்கையாளர்களின் நிகழ்நேர பின்னூட்டத்தை உடனடியாகப் பெற, அனைத்து சமூகவலைதளங்களிலும் ஹோண்டா பிக்விங் தீவிரமாகச் செயலாற்றி வருகிறது. வாடிக்கையாளர்களின் பயண உற்சாகத்தை இரட்டிப்பாக்குவதற்காகவும், புதிய வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காகவும் அர்ப்பணிக்கப்பட்ட இவ்விடத்தில் பல்வேறுவிதமான உதிரிபாகங்களும் ரைடிங் கியர்களும் கூட கிடைக்கும்.