விழாக்காலத்திற்காக புதிய ஹோண்டா அமேஸை ஹோண்டா கார்ஸ் இந்தியா இயக்குகிறது
விழாக்காலத்திற்காக புதிய ஹோண்டா அமேஸை ஹோண்டா கார்ஸ் இந்தியா இயக்குகிறது
மேம்படுத்தப்பட்ட வெளிப்புற ஸ்டைல் நுட்பமான குரோம் மோல்டிங் லைன்களுடன் கூடிய ஸ்லீக்கான சாலிட் விங் ஃபேஸ் ஃபிரன்ட் கிரில்லுடன், மேம்படுத்தப்பட்ட எல்ஈடி புரொஜெக்டர் ஹெட்லாம்ப்கள் ஒருங்கிணைக்கப்பட்ட சிக்னேச்சர் டிஆர்எல்களுடன், புதிய பிரீமியம் சி-ஷேப்டுஎ ல்ஈடி ரியர் கம்பினேஷன் லைட்டுகள்
புதிய டைமண்டு கட் டூ-டன் அலாய் வீல்கள்
பிரீமியம் செறிவூட்டப்பட்ட உட்புறங்கள் சாட்டின் சில்வர் அசென்ட்களுடன்
புதிய வண்ணம் – மெட்டியோராய்டு கிரே மெடாலிக்கின் அறிமுகம்
மேம்படுத்தப்பட்ட பார்க்கிங் வசதிக்கான புதிய மல்டி-வியூரியர் கேமராவின் அறிமுகம்
சென்னை, 18 ஆகஸ்டு 2021: ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட், (HCIL), இன்று மேம்படுத்தப்பட்ட தோற்றம், பிரீமியம் வெளிப்புற ஸ்டைலிங் மற்றும் பட்டுப்போன்ற உட்புறத்துடன், புதிய அமேஸை அறிமுகப்படுத்தியுள்ளது. ”அற்புதமான” புதிய அமேஸ் பெருமையுடன் வாழ்க்கையை வாழ்வதற்கான உணர்வினை உருவகப்படுத்துவதுடன், அதன் புதிய அவதாரத்துடன் ஒரு முழுமையான புதிய மனப்பான்மையையும் புதிய நம்பிக்கையையும் குறிக்கிறது. பிரீமியம் ஃபேமிலி செடன் தற்போது மேனுவல் மற்றும் சிவிடி டிரானஸ்மிஷனுடன் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு இன்ஜின்களிலும் கிடைக்கிறது. ஒரு மிகவும் புதிய மெட்டியோராய்டு கிரே மெட்டாலிக் வண்ணம் வகைகளில் சேர்க்கப்பட்டுள்ளது, அது சமகால மற்றும் பிரீமியம் தோற்றங்களைப் பெருக்குகிறது.
புதியஅமேஸின்அறிமுகம்குறித்துக்கருத்துத்தெரிவித்த, ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட்டின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான திரு காகூ நகானிஷி சொன்னதாவது, “இந்தியாவில் மிகவும் வெற்றிகரமான மாடலும், நாட்டில் 4.5 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களால் நன்கு ஏற்கப்பட்ட புதிய அமேஸை அறிமுகம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது, எங்களின் வணிகத்திற்கான ஒரு உத்தி முறை மாடலானதும், குறிப்பாக இந்தியா வாடிக்கையாளர்களுக்காக உருவாக்கப்பட்டது மற்றும் தனிச்சிறப்பாக இந்தியாவிலேயே தயாரானதுமான, அமேஸ் தற்போது இந்தியாவில் ஹோண்டாவுக்கான பெரிய அளவிலான இயக்குதலாகும் மற்றும் சிறந்த-விற்பனையாகும் செடான்களில் தனது நிலையைப் பராமரித்து வருகிறது. புதிய அமேஸ் அதன் மேம்படுத்தப்பட்ட தோற்றங்கள் மற்றும் ஸ்டைலிங்குடன் செடான் அனுபவத்திற்கு முன் ஒரு கிளாஸ் ஒன் அனுபவத்தை வழங்குகிறது.” ”விழாக்காலம் தொடங்குவதற்கு முன்னதாக புதிய அமேஸை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம் மற்றும் இந்தக் கார் அதிகப்படியான உற்சாகத்துடன் வாடிக்கையாளர்களால் வரவேற்கப்படும் என்று நாங்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளோம்” என்றுமேலும்அவர்தெரிவித்தார்.
புதிய அமேஸின் வெளிப்புற மாற்றங்கள் உறுதியான மற்றும் வசதியான தோற்றத்தை வழங்குகிற நுட்பமான குரோம் மாடலிங் லைனுடன் ஸ்லீக் சாலிட் விங் ஃபேஸ் பிரண்ட் கிரில், ஒருங்கிணைக்கப்பட்ட சிக்னேச்சர் எல்ஈடி டிஆர்எல்களுடன் கூடிய நவீனமான மற்றும் ஸ்டைலான அட்வான்ஸ்டு எல்ஈடி புரொஜெக்டர் ஹெட் லாம்புகள், ஸ்லீக் குரோம் கார்னிஷ் உடன் கூடிய புதிய மேம்படுத்தப்பட்ட ஃபிரன்ட் ஃபாக் லேம்புகள், மற்றும் விரிவான தோற்றத்திற்காக ஒரு மறுவடிவமைக்கப்பட்ட ஃபிரன்ட் பம்பர் கிரில் ஆகியவற்றை உள்ளடக்குகிறது. காரின் ஃபிரன்ட் ஃபாக் லேம்புகளுடன் புதியதாக வடிவமைக்கப்பட்ட ஹெட்லேம்புகள் இரவில் ஒளிரும்.
தனிச்சிறப்பான சிக்னேச்சர் ரெட் லூமினென்ஸுடன் கூடிய புதிய மற்றும் தனிச்சிறப்பான பிரீமியம் சி-ஷேப்டு எல்ஈடி ரியர் காம்பினேஷன் லேம்புகள் மற்றும் பிரீமியம் கார்னிஷ் மற்றும் ரிஃப்லெக்டர்களுடன் கூடிய ரியர் பம்பர் ஒரு கம்பீரமான தோற்றத்தை புதிய அமேஸின் பின்புறத்துக்கு தருகிறது. புதுப்பிக்கப்பட்ட மாடல் புதிய டைமண்டு-கட்இரண்டு டோன் மல்டி-ஸ்போக் ஆர்15 அலாய் வீல்களையும் டச் சென்சார் அடிப்படையிலான ஸ்மார்ட் என்ட்ரியுடன் கூடிய புதிய குரோம் டோர் ஹாண்டில்களையும் கொண்டிருக்கிறது. அது காரின் ஒட்டு மொத்த வெளிப்புறத் தோற்றத்தை மேம்படுத்துகிறது.
புதிய அமேஸின் கேபின் நேர்த்தி, வசதி மற்றும் ஆடம்பரத்துடன் அதன் புதிய பிரமிப்பூட்டு உட்புறங்களை உருவாகப்படுத்துகிறது. புதிய அமேஸ் டாஷ்போர்டு மற்றும் டோர் டிரிம்களில் சாடின் சில்வர்
அலங்காரத்துடன், ஸ்டியரிங் வீல் கார்னிஷ் மற்றும் ஏசி வென்ட் நாப்களில் சாட்டின் சில்வர் கார்னிஷ் உடன் பிரீமியம் மற்றும் அதிக கன்ட்ராஸ்ட்ன உணர்வினை அதன் எர்கோனமிக்காக ஒழுங்குப்படுத்தப்பட்ட காக்பிட்டை வலியுறுத்துகிறது. புதிய ஸ்டிச்சிங் பேட்டர்ன் உடன் ரபிரீமியம் சீல் அப்ஹோல்ஸ்டரி, மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஷிஃப்ட் லிவருக்கான லெதர்பூட் மற்றும் டிரங் லிட் லைனிங் உயர்தரமான தொடுதல் மற்றும் உணர்தலை மேம்படுத்துகிறது. போதுமான லெக் ரூம், கான்டர்டு பக்கெட் சீட்கள், டோர் ரிம்களில் ஃபேப்ரிக் பேடு மற்றும் புதிய ஃபிரண்ட் மேப் லேம்ப்பை வழங்குவதற்காக சௌகரியமான மற்றும் தாராளமான உட்புறங்களுடன் ஒரு ரூமி கேபின் வருகிறது. ஒன்-புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், ஆட்டோமேடிக் கன்ட்ரோல், F1 இன்ஸ்பயர்டு ஸ்போர்ட்டி பேடல் ஷிப்ட், மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற உயர் செயல்பாட்டு அம்சங்களுடன் பேக் செய்யப்பட்டு வருகிறது.
ஹோண்டாவின் மிகவும் பாராட்டப்படுகிற 1.2L i-VTEC பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5L i-DTEC டீசல் இன்ஜின் ஆகியவற்றில் மேனுவல் மற்றும் சிவிடி (கன்ட்டிநியஸ்லி வேரியபிள் டிரான்ஸ்மிஷன்) வேரியன்ட்டில் ஹோண்டா அமேஸ் பவர் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் இன்ஜின் அதன் மேம்படுத்தப்பட்ட லோ ஃபிரிக்ஷன் தொழில்நுட்பங்களுடன் அவுட்புட் மற்றும் சிக்கனத்திற்காக, 90PS Power @ 6000 rpm MT & CVT இரண்டிலும் வருகிறது. டீசல் இன்ஜின் ரிபைன்மென்ட் உடன் அதிக ஆற்றலை அடைவதற்காக MTயில் 100ps மற்றும் CVT வேரியன்ட்களில் 80 ps@3600 rpm-லும் உருவாக்கப்பட்டுள்ளது. சிறப்பான வண்டி ஓட்டும் ஆனந்தம் மற்றும் உயர்வான எரிபொருள் சிக்கனத்தை வழங்குவதற்காக CVT வசதி பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் இரண்டிலும் கிடைக்கப் பெறுகிறது. ஹோண்டா டீசலின் உயர் டார்க் மற்றும் CVTயின் லீனியர் ஆக்சலரேஷன் ஆகியவற்றின் கலவ சீரான மற்றும் ரெஸ்பான்சிஸ் ஆக்சலரேஷனை தருகிறது.
இன்ஜின்
டிரான்ஸ்மிஷன்
பவர்
டார்க்
எரிபொருள் சிக்கனம் (டெஸ்ட் டேட்டாவின்படி)
1.2L i-VTEC (பெட்ரோல்)
5MT
90PS @6 000rpm
110 Nm @ 4 800 rpm
MT – 18.6 km/l
CVT
CVT – 18.3 km/l
1.5L i-DTEC (டீசல்)
5MT
100PS @3 600rpm
200 Nm @ 1 750 rpm
MT – 24.7 km/l
CVT
80PS @ 3 600 rpm
160 Nm @ 1 750 rpm
CVT – 21.0 km/l
புதிய அமேஸுக்கு அழகுணர்வையும் வசதியையும் சேர்ப்பது DIGIPAD 2.0 –17.7 செமீ டச் ஸ்கிரீன் அட்வான்ஸ்டு டிஸ்பிளே ஆடியோ சிஸ்டம், தடையற்ற மற்றும் ஸ்மார்ட் கனெக்டிவிட்டியை ஆப்பிள் கார்பிளே™, ஆன்டிராய்டு ஆட்டோ™, வெப்லிங்க் மற்றும் வாய்ஸ் கமாண்ட், மெசேஜ்கள், ஹாண்ட்ஸ்ஃப்ரீ டெலிஃபோன் மற்றும் ஆடியோ ஸ்டிரீமிங் சப்போர்ட் மற்றும் ஒயர்லெஸ்ட் இன்ஃப்ரா ரெட் ரிமோட்டுக்கான ப்ளூடூத் போன்ற கூடுதல் செயல்பாடுகளையும் வழங்குகிறது. மேலும், ரியர் கேமரா டிஸ்பிளே தற்போது மல்டி-வியூ, ஒயிடு வியூ, மற்றும் டாப்-டவுன் வியூவை மேம்படுத்தப்பட்ட பார்க் செகயரித்திற்காக டைட் ஸ்பாட்டுகளில் காட்டலாம்.
புதிய அமேஸ் பாதுகாப்பினை தக்கவைப்பதற்கான நவீன அம்சங்களுடனும் ஹோண்டாவின் ஆக்டிவ் மற்றம் பேசிவ் பாதுகாப்புத் தொழில்நுட்பத்துடனும் பேக் செய்யப்பட்டுள்ளது, அது அனைத்து வேரியன்ட்களிலும் நிலையான உபகரணமாக வழங்கப்படுகிறது. ஹோண்டாவின் சொந்த ACE பாடி கட்டமைப்பு, டிரைவர் மற்றும் ஃபிரண்ட்ட பேசஞ்சருக்கான ஸ்டாண்டர்டு டியூவல் SRS ஏர்பேக்குகள், ஸ்டாண்டர்டு ஆன்டி-லாக் பிரேக் சிஸ்டம் (ABS) எலக்ட்ரிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன் (EBD), ஸ்டாண்டர்டு ISOFIX சீட்டுகள், ECU இம்மொபைலசைர் சிஸ்டம், புதிய ரியர் மல்டி-வியூ கேமரா கைடுலைன்ஸுடன், புதிய ஆட்டோமேடிக் ஹெட்லைட் கன்ட்ரோல் லைட் சென்சாருடன், டிரைவர் சைடு விண்டோ ஒன் டச் அப்/டவுன் பின்ச் கார்டு, ரியர் பார்க்கிங் சென்சார், இம்பேக்ட் மிட்டிகேட்டிங் ஃபிரண்ட் ஹெட் ரெஸ்ட்ஸ் மற்றும் பெடஸ்டரியன் இன்ஜுரி மிட்டிகேஷன் தொழில்நுட்பத்துடன்.
ஹோண்டா அமேஸ் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியன்ட்களில் 3 கிரேட்களில் கிடைக்கப் பெறுகிறது - E மாற்றமில்லாமல் தக்க வைக்கப்படுகிறது, புதிய S மற்றும் புதிய VX மேனுவல் டிரான்ஸ்மிஷனில் வருகிறது. கூடுதலாக, S மற்றும் VX கிரேடுகள் பெட்ரோலிலும் VX கிரேட் டீசலிலும் கிடைக்கப் பெறுகிறது. புதிய அமேஸ் 5 வெளிப்புற நிறங்களுக்கான தேர்வுகளுடன் கிடைக்கப்பெறுகிறது – மெட்டியோராய்டு கிரே (புதிய அறிமுகம்), ரேடியன்ட் ரெட் மெட்டாலிக், பிளாட்டினம் ஒயிட் பியர்ல், லூனார் சில்வர் மெட்டாலிக் மற்றும் கோல்டன் பிரவுன் மெட்டாலிக்.
வாடிக்கையாளர்களுக்கு ஒரு நிலையான பயனாக 3 வருடங்களுக்கான வரம்பற்ற கிலோ மீட்டர்களுக்கான வாரண்டியுடன் முழுமையான மனஅமைதியை புதிய ஹோண்டா அமேஸ் வழங்குகிறது. கூடுதலாக, கூடுதன்
மனஅமைதிக்காக நீடிக்கப்பட்ட வாரண்டியை வரம்பற்ற கிலோமீட்டர்களுடன் கூடுதலாக இரண்டு ஆண்டுகளுக்கும் அதன் பிரிவில் சிறப்பான 10 ஆண்டு எனிடைம் வாரண்டியையும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம். 1 ஆண்டு/10,000 கி.மீ-க்கான சர்வீஸ் இடைவேளை இவற்றில் எது முந்தையதோ அதனுடன் குறைவான பராமரிப்பு செலவினை வழங்குகிறது.
அறிமுகத்திற்குப் பிறகு உடனடியாக நாடெங்கிலும் HCIL நெட்ஒர்க்கில் இருந்து புதிய அமேஸ் டெலிவரிகளை HCIL துவங்கும். ஹோண்டாவின் ஆன்லைன் சேல்ஸ் தளமான “ஹோண்டா ஃபிரம் ஹோம்” மூலமும் வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே புதுப்பிக்கப்பட்ட புதிய அமேஸை வாடிக்கையாளரக்ள் புக் செய்து வாங்கலாம்.
ஹோண்டா அமேஸின் முழு ரேஞ்சுக்கான விலைகள் (எக்ஸ் ஷோரூம் டெல்லி)
Fuel Type
Grade
Price
Petrol
E MT
Rs 632,000
New S MT
Rs 716,000
New S CVT
Rs 806,000
New VX MT
Rs 822,000
New VX CVT
Rs 905,000
Fuel Type
Grade
Price
Diesel
E MT
Rs 866,500
New S MT
Rs 926,000
New VX MT
Rs 1,025,000
New VX CVT
Rs 1,115,000
ஹோண்டா அமேஸ்
1வது தலைமுறை ஹோண்டா அமேஸ் இந்தியாவில் ஏப்ரல் 2013 அறிமுகப்படுத்தப்பட்டது அதனைத் தொடர்ந்து 2வது தலைமுறை மு 2018ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அமேஸ் தற்போது இந்தியாவில் மிகவும் வெற்றிகரமான மாடலாக உள்ளது மற்றும் 2வது மற்றும் 3வது அடுக்கு சந்தைகளில் தனது உறுதியான உளத்தன்மையையும் புகழையம் பெற்றுள்ளது, இது இந்த நகரங்களில் இருந்து வரும் மாடல் விற்பனையில்68% ஆகும். வாடிக்கையாளர்கள் இடையே ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மாடல்களின் வளர்ந்து வரும் புகழுடன், அமேஸில் ஆட்டோமேடிக்குகளின் பங்கு 20%க்கு அதிகமாகும். ஹோண்டா வரிசையில் ஒரு என்ட்ரி மாடலாக இருப்பதுடனான அதன் பங்களிப்புக்கு உண்மையாக, முதன் முறையாக வாங்கும் அதன் வாடிக்கையாளர்களில் சுமார் 40% பேருக்கு, ஒரு மிகப் பெரிய செடானாக கௌவரத்தை வழங்கும் ஒரு சிறந்த தேர்வாக இருப்பதுடன் அமேஸ் ஹோண்டாவின் நீடித்துழைக்குந் தன்மை, தரம், நம்பகம் மற்றும் பராமரிப்புக்கான குறைந்த செலவுடன் பெரிய மன நிம்மதியைத் தருகிறது.
About Honda Cars India Ltd
Honda Cars India Ltd. (HCIL), a leading manufacturer of premium cars in India, was established in December 1995 with a commitment to provide Honda’s passenger car models and technologies, to the Indian customers. HCIL’s corporate office is based in Greater Noida, UP and its state-of-the-art manufacturing facility is located at Tapukara, District. Alwar, Rajasthan.
The company’s product range include Honda Jazz, Honda Amaze, Honda WR-V, and Honda City catering to diverse needs of its discerning buyers across different segments. Honda’s models are strongly associated with advanced design and technology, apart from their established qualities of durability, reliability, safety and fuel-efficiency. The company has a strong sales and distribution network spread across the country.
Besides the new car business, Honda offers one stop solution for buying and selling pre-owned cars through its business function Honda Auto Terrace. The Honda Certified Pre-owned cars come with an assurance of quality and peace of mind that caters to the diverse and burgeoning needs of pre-owned car buyers across the country.