ஜெயா டிவியின் "தக திமி தக ஜனு" இறுதி போட்டி - சீசன் 1
ஜெயா டிவியின் "தக திமி தக ஜனு" இறுதி போட்டி - சீசன் 1
ஜெயா டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் பரதநாட்டிய கலைஞர்களுக்கான போட்டி நிகழ்ச்சி "தக திமி தக ஜனு" - சீசன் 1 இறுதி சுற்று(Grand finale) வரும் வாரங்களில் ஒளிபரப்பாகிறது .
கால் அரை சுற்று ,அரை இறுதி சுற்று மற்றும் இறுதி சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 போட்டியாளர்கள் இறுதிப் போட்டியில் போட்டியிடுவார்கள்.இந்த இறுதி போட்டி முதல் மற்றும் இரண்டாவது இடத்தையும் தேர்ந்தெடுக்கும்.
இந்த சீசனின் நிரந்தர நடுவர்களாக பழம்பெரும் தம்பதிகள் குருக்கள் பத்மபூஷன் திரு. தனஞ்செயன் மற்றும் திருமதி .சாந்தா தனஞ்செயன் ஆகியோருடன் கிராண்ட் ஃபைனலுக்காக மேலும் புகழ்பெற்ற நடன ஆளுமைகளான கலைமாமணி நந்தினி ரமணி, பத்மஸ்ரீ மீனாட்சி சித்தரஞ்சன் மற்றும் கலாஸ்ரீ குரு காயத்ரி கிருஷ்ணமூர்த்தி (சிட்னி) ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
"தக திமி தக ஜனு" - சீசன் 1 இதன் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை - ஏப்ரல் 24 மற்றும் மே 1 ஆம் தேதி காலை 8:30 மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது . இந்நிகழ்ச்சியை நடிகை இந்திரஜா தொகுத்து வழங்குகிறார் . இயக்கம் - கலைமாமணி டாக்டர் ராதிகா சுரஜித் .