இயற்கை விவசாயம் குறித்து விழா
இயற்கை விவசாயம் குறித்து விழா நடத்திய இயக்குநர்
தன் வயலிலும் இயற்கை விவசாயத்தை பாரம்பரிய நெல்லில் செய்தும்,சினிமாவிலும் இயற்கை விவசாயத்தை பற்றி குத்தூசி என்ற திரைப்படத்தை எடுத்த இயக்குனர் சிவசக்தி அவர்கள், தனது பிறந்த ஊரான கள்ளக்குறிச்சி அருகே மாத்தூர் கிராமத்தில் இயற்கை விவசாயம் அறிமுக விழா நடத்தினார்.
விழாவில் நம்மாழ்வார் படத்தை திறந்து வைத்து இயற்கை விவசாயம் ஏன் வேண்டும் , அதன் சிறப்பு பற்றியும் சான்றோர்கள் பேசினார்கள்.மற்றும் விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் காட்டுயாணம் காலாநமக்,மாப்பிள்ளை சம்பா தந்தும் ,ஏரி கரையில் நட பனை விதையும் , அனைவருக்கும் விதைபந்தும், பள்ளிமாணவர்களுக்கு மரகன்றும் தந்தனர்.நிகழ்ச்சியில் 465 வகையான பாரம்பரிய நெல் கண்காட்சி வைத்தனர்.
அனைவருக்கும் உணவாக பாரம்பரிய அரிசியான காட்டுயாணம் கஞ்சி, மாப்பிள்ளை சம்பா சாதம் வழங்க பட்டது.உழவர்களுக்கு ஒரே கருத்தாக உங்கள் வயலில் உங்களுக்காண உணவை பாரம்பரிய நெல்லில் இயற்கை விவசாயம் செய்யுங்கள். விதைநெல்லை பாதுகாத்தும். இயற்கையை போற்றி வாழ்வோம் என்று கூறினார்கள்.
விழாவை குத்தூசி இயற்கை போற்றும் நண்பர்கள் மற்றும் பசுமை சிகரம் அறக்கட்டளை. எழில் இயற்கை வேளாண் பண்னையும் சேர்ந்து இவ்விழாவை நடத்தினார்கள் .