இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சிறப்பு மீட்பு விமானங்களின் பயணத்திட்டம்....

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சிறப்பு மீட்பு விமானங்களின் பயணத்திட்டம்....

இந்திய வெளியுறவு அமைச்சகம் மே 7ம் தேதி முதல் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்திய நாட்டினரை தாயகம் அழைத்து வருவதற்கான விமானப்பயண திட்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.....

  இந்த திட்ட அறிக்கையின் படி குவைத்தில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானம் மீட்பு பணி தொடங்கிய 4 வது நாளில் அதாவது மே 10 ம் தேதி 200 பேருடன் சென்னை சர்வதேச விமான நிலையம் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது....

 தமிழகம் செல்லும் சிறப்பு விமானங்கள் விபரம்... பயணிகள் எண்ணிக்கை தோராயகமான.. 

மே 8ம் தேதி (UAE) #அமீரகத்தில் இருந்து 2 சிறப்பு விமானங்கள்... #துபாயில் இருந்து 400 பயணிகளுடன் சென்னை விமான நிலையம்..... 

மே 9ம் தேதி #Malaysia மற்றும் #USA (அமெரிக்காவில்) இருந்து தலா ஒரு சிறப்பு விமானங்கள்.. Malaysia வில் இருந்து 250 பயணிகள் திருச்சி விமான நிலையம், அமெ‌ரிக்காவில் இருந்து மும்பை வழியாக 300 பயணிகள் சென்னை விமான நிலையம்.. 

மே 10ம் தேதி #குவைத் மற்றும் #சிங்கப்பூரில் இருந்து தலா ஒரு சிறப்பு விமானங்கள்... குவைத்தில் இருந்து சென்னைக்கு 200 பயணிகள் சென்னை விமான நிலையம்.. சிங்கப்பூரில் இருந்து 250 பயணிகள் திருச்சி விமான நிலையம்... 

மே 11ம் தேதி #மலேசியாவில் இருந்து ஒரு சிறப்பு விமானம்.. மலேசியாவில் இருந்து 250 பயணிகள் சென்னை விமான நிலையம்.. 

 மே 12ம் தேதி #ஓமன் மற்றும் (UK) #லண்டனில் இருந்து தலா ஒரு சிறப்பு விமானங்கள்... ஓமனில் (muscat) இருந்து 200 பயணிகள் சென்னை விமான நிலையம்... லண்டனில் இருந்து 250 பயணிகள் சென்னை விமான நிலையம்... 

மே 13ம் தேதி #Bangladesh மற்றும் #Phillipines லிருந்து தலா ஒரு சிறப்பு விமானங்கள்.. Bangladesh ( Dhaka) 200 பயணிகளுடன் சென்னை விமான நிலையம்... Philippines (manila) 250 பயணிகள் சென்னை விமான நிலையம் 

மொத்தம் 11 சிறப்பு விமானங்கள் மே7 முதல் ஒரு வாரம் நடக்கும் மீட்பு பணியில் தமிழகத்திற்கு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.....

இதில் யாருக்கெல்லாம் முன்னுரிமை அளிக்கப்படும் குறித்து சிறிய விளக்கம்....

  விசா முடிந்தவர்கள், வேலை ஒப்பந்தம் முடிந்தவர்கள், சுற்றுலா விசாவில் வந்து சிக்கியுள்ள நபர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்ட நபர்கள், குழந்தைகள், பெரியவர்கள், கற்பினி பெண்கள், விடுதலை செய்யபட்ட சிறை கைதிகள், படிப்பதற்காக வெளிநாட்டிற்கு வந்தவர்கள். மேலும் விடுமுறையில் தாயகம் திரும்ப முயற்சி செய்யும் நபர்களுக்கும் வாய்ப்புகள் கடைசியாக வழங்கபடும் என்று தெரிகிறது