கலைஞர் டிவியில் கலக்கலான கேம் ஷோ – “கலாட்டா ராணி”

சமூகத்தில் பெண்களை தாழ்த்தி பார்ப்பவர்கள் மத்தியில், ஆணுக்கு பெண் நிகரானவள் என்று சொல்லும் அளவுக்கு, பெண்கள் அனைத்து விதமான தளங்களிலும் தங்களை நிரூபித்து வருகின்றனர். ஆண்களுக்கு போட்டியாகவும், பல இடங்களில் தடம்பதித்து தூள் கிளப்பிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், பெண்களை மையப்படுத்தி, பெண்கள் மட்டுமே பங்கேற்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக “கலாட்டா  ராணி” என்கிற பிரம்மாண்ட நிகழ்ச்சி, கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியை ஆதவன் மற்றும் ஜெயச்சந்திரன் இணைந்து தொகுத்து வழங்குகிறார்கள்.

முழுமுழுக்க கலகலப்பான அம்சங்களை கொண்ட இந்த நிகழ்ச்சியில் 3 சுற்றுகள் இடம்பெறுகிறது. மூன்று போட்டியாளர்கள் தங்களுடன் ஒரு துணையோடு நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.இறுதியாக, அதிக மதிப்பெண் பெறும் போட்டியாளர், கலாட்டா ராணியாக மகுடம் சூடப்படுவார்.

சினிமா முதல் சின்னத்திரை நட்சத்திரங்கள் வரை திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சி, கலைஞர் தொலைக்காட்சியில் வருகிற அக்டோபர் 10-ந் தேதி முதல் ஞாயிறுதோறும் பகல் 12:00 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.