கடுமையான பித்தப்பை அழற்சிக்கான வெற்றிகரமான அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து 93 வயது மூதாட்டிக்குப் புது வாழ்வு

கடுமையான பித்தப்பை அழற்சிக்கான வெற்றிகரமான அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து 93 வயது மூதாட்டிக்குப் புது வாழ்வு
கடுமையான பித்தப்பை அழற்சிக்கான வெற்றிகரமான அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து 93 வயது மூதாட்டிக்குப் புது வாழ்வு
கடுமையான பித்தப்பை அழற்சிக்கான வெற்றிகரமான அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து 93 வயது மூதாட்டிக்குப் புது வாழ்வு

கடுமையான பித்தப்பை அழற்சிக்கான வெற்றிகரமான அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து 93 வயது மூதாட்டிக்குப் புது வாழ்வு

• அறுவை சிகிச்சை முடிந்த 48 மணி நேரத்துக்குப் பிறகு பித்தப்பை அழற்சி அழுகிய புண்ணுடன் நோயாளி வீட்டுக்கு அனுப்பப்பட்டார்

• கோவிட் இரண்டாம் அலைக்குப் பிறகு பித்தப்பை அழற்சி அழுகிய புண் சிக்கல் விகிதம் 80% அதிகரிப்புடன் இளைஞர்களிடம் அதிகம் காணப்படுகிறது.

சென்னை: 2021 ஆகஸ்ட் 4: சென்னை, அடையாறு, ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் குழு சிக்கலான லேபரோஸ்கோபிக் அறுவை சிகிச்சையை கடுமையான பித்தப்பை அழற்சியுள்ள 93 வயது மூதாட்டிக்கு (மனத்தாலும், இதயத்தாலும், இளையவர்) வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இது பித்தப்பை அழற்சி அழுகிய புண்ணாகும். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 48 மணி நேரத்துக்குப் பிறகு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இவர் மற்றவர்களைப்போல் இயல்பான வாழ்க்கை இப்போது வாழ்ந்து வருகிறார். முன்பை விடவும் இன்னும் இளமையாக உணர்வதுடன், சுறுசுறுப்பாகவும் இருக்கிறார்.

3 வருடங்களுக்கு முன்பு பித்தப்பைக் கற்களை அகற்ற ஸ்டெண்ட் சிகிச்சையை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரது பித்தப்பை சரியாக இயங்காததால், பல்வேறு சிக்கல்களும், பிரச்சினைகளும் தோன்றின. கடுமையான பித்தப்பை அழற்சியுடன், வீக்கம் இன்னும் அதிகமாகி, பித்தப்பை புண்ணாகி சீழுடன் வழியத் தொடங்கியது. கோவிட் தொற்றுக்குப் பயந்து மருத்துவருடனான சந்திப்பைத் தள்ளிப் போட்டதால், உடல்நிலை இன்னும் மோசமடைந்தது. கடுமையான வயிற்று வலியும், வாந்தியும் ஏற்பட்டதால், அவரது உறவினர்கள் சென்னை அடையாறு ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை மருத்துவ நிபுணர்களைச் சந்திக்க அழைத்து வந்தனர்.

வீக்கத்தின் கடுமையைத் தெரிந்து கொள்ள நோயாளிக்கு அல்ட்ராசவுண்ட் மற்றும் சிடி ஸ்கேன் பரிசோதனைகள் செய்யப்பட்டன. பரிசோதனைகளைத் தொடர்ந்து நோயாளி அறுவை சிகிச்சை செய்து கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இரைப்பைக் குடல் அறுவை சிகிச்சை நிபுணர் பேராசிரியர் டாக்டர் நீலமேகம் நோயாளிக்கு சிகிச்சை குறித்து விளக்கியதுடன், வீக்கம் கடுமையாக இருப்பதால் அறுவை சிகிச்சையே சிறந்த வழி என்றும் புரிய வைத்தனர். மேலும் அறுவை சிகிச்சை உடனடியாக மேற்கொள்ளாவிட்டால், வேறுபல உடல நலக் கோளாறுகள் ஏற்டலாம் என்றும் அறிவுறுத்தினார்கள்.

இது குறித்து சென்னை அடையாறு ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை இரைப்பைக் குடல் முத்த அறுவை சிகிச்சை நிபுணரும், மினிமல் அக்ஸெஸ் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் கபாலி நீலமேகம் பேசுகையில் ‘தீவிர வயிற்றுவலி மற்றும் வாந்தியுடன் நோயாளி என்னிடம் அழைத்து வரப்பட்டார். பரிசோதனையில் அவருக்குக் கடுமையான பித்தப்பை அழற்சி இருப்பது உறுதியாகவே, எங்கள் மருத்துவக் குழு அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரைத்தது. மூதாட்டி அறுவை சிகிச்சைக்குத் தயங்கியதுடன், நோயை அறுவை சிகிச்சையின்றிக் குணப்படுத்த மாற்று வழிகளையும் கேட்டார். அவரது உறவினர்களாலும் அவரைச் சமாதானப்படுத்த இயலவில்லை. நிறைவாக மருத்துவ நிபுணர்கள் அறுவை சிகிச்சையைத் தவிர வேறு வழியில்லையென அதன் அவசியத்தை விளக்கிய பிறகே ஒப்புக் கொண்டார்’ என்றார்.

மயக்க மருத்து நிபுணர்கள் டாக்டர் வித்யா மோகன்ராம் மற்றும் டாக்டர் ஷினு அப்துல் ரஷீத் உதவியுடன், டாக்டர் மோகன் ராவும், டாக்டர் நரேஷும், நானும் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்தோம். பித்தப்பையை அறுவை சிகிச்சை மூலம் வெட்டி எடுத்துப் பார்த்ததில், அதைச் சுற்றி சீழ் வழிந்ததாலும், கேலாட் முக்கோணம் உறைந்ததாலும், அறுவை சிகிச்சை செய்யச் சிரமப்பட்டோம். கேலாட் தடிமனானதாலும், பித்தப்பைப் புண் சீழில் மூழ்கியிருந்த்தாலும், நீர்மக் குழாய் வரை சென்று அதை அகற்றினோம். அறுவை சிகிச்சை முடிந்த 48 மணி நேரத்துக்குப் பிறகு நோயாளி வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

கோவிட் கொள்ளை நோய்க்கு முந்தைய மற்றும் பிந்திய நோயாளிகளின் எண்ணிக்கையை ஒப்பிட்டு அவர் மேலும் பேசுகையில் ‘கோவிட் தொற்று நோய்க்கு முன் ஒவ்வொரு மாதமும் 3-4 நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளித்த நிலையில், இரண்டாம் அலைக்குப் பிறகு மாதம் சராசரியாக 22-25 நோயாளிகள் பித்தப்பைக் கோளாறுகளுடன் வருகின்றனர். தொற்றுக்கு அஞ்சி மருத்துவர்களைச் சந்திப்பதைத் தள்ளிப் போடுவதால், சிக்கல் விகிதம் 70%-80% வரை அதிகரிக்கிறது. கோவிட் பிந்திய காலகட்டத்தில் சீழும் புண்ணுடன் கூடிய பித்தப்பை அழற்சி இளைஞர்களிடம் காணப்படுவது முக்கிய செய்தியாகும். பிரச்சினை சிறிதாக இருக்கும் போதே மருத்துவருடனான சந்திப்பைத் தள்ளிப் போட்டதால் நோய் முற்றியதற்குக், கோவிட் தொற்று அச்சமும், கோவிட் ஒழிவதற்குக் காத்திருந்ததும், முக்கியக் காரணிகளுள் ஒன்றாகும். காத்திருப்புக் காலமும், சுயமாக மருத்துவம் செய்து கொள்வதும், நோயுறுதலையும், அறுவை சிகிச்சையின் சிக்கலையும் அதிகரிக்கும். சாதாரண பித்தக் கல் சிகிச்சைக்கு உடனடியாக வந்து குணமடைய வேண்டியவர்கள், இப்போது பித்த நாளத்தில் பித்தக் கற்களுடன் தாமதமாக வருவதால், மஞ்சள் காமாலை நோய்க்கே வழிவகுக்கிறது. எனவே நோயாளிகள் எந்தவொரு நோயாக இருந்தாலும் உடனடியாக மருத்துவரைச் சந்தித்துச் சிகிச்சை பெறத் தவறினால், சாதாரண விஷயங்கள் கூடச் சிக்கலான பிரச்சினையாக மாறிவிடும்.

 இரைப்பைக் குடல் மருந்து மருத்துவர், தொற்று நோய்ப் பாதுகாப்புக் குழு, மயக்க மருந்து நிபுணர்கள், உணவுக் கட்டுப்பாடு நிபுணர்கள், செவிலியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய மருத்துவ நிபுணர்களின் பன்முகக் குழு ஒருங்கிணைந்து பணியாற்றி வெற்றிகரமான சிகிச்சைக்கு வழிவகுத்தது.