'இன்றைய செய்தி'

'இன்றைய செய்தி'

அன்றாட அரசியல் நிகழ்வுகளின் நகர்வுகளை மிக துல்லியமாக கணித்து, அன்றைய தினத்தின் பேசு பொருளாக அமையவிருக்கும் செய்தியை அலசுகிறது நியூஸ் 7 தமிழின் 'இன்றைய செய்தி' நிகழ்ச்சி. பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்நிகழ்ச்சி நாள் தோறும் காலை 9:00 மணிக்கு நேரலையாக ஒளிபரப்பாகிறது.

இன்றைய செய்தி' நிகழ்ச்சியின் செய்திக் குழு, அவர்கள் தேர்வு செய்யும் தலைப்பின் முழு விபரத்தை நுட்பமாய் ஆராய்ந்து, அச்செய்தியின் பல பரிமாணங்களை அரைமணி நேரத்தில் வழங்கி வருகிறது. எடுத்துக் கொள்ளப்படும் தலைப்பிற்கு ஏற்றார்போல் சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்படுகின்றனர். நியூஸ்7தமிழ் சார்பில் இந்நிகழ்ச்சியை மிருணாளினி  தயாரிக்க நெறியாளர்கள் சுகிதா, சிவசங்கரி  மற்றும்  மனோஜ்  தொகுத்து வழங்குகின்றனர்,,

விறுவிறுப்பான கேள்விகளும், அதற்கேற்ற ஆழத்தோடு கூடிய அரசியல் விமர்சனங்களும் இந்நிகழ்ச்சியின் மூலம் முன் வைக்கப்படுகின்றன. பல சமயங்களில் இன்றைய செய்தி நிகழ்ச்சியின் தலைப்பு, ஒட்டு மொத்த ஊடகத்தின் அன்றைய பேசு பொருளாகவே மாறியிருக்கிறது. தேர்வு செய்யப்படும் தலைப்பில் எந்த விதமான பாகுபாடும் இன்றி சமூக பிரச்னைகளையும் அதற்குத் தேவையான அரசியல் பார்வைகளையும் சமன்படுத்தி தொகுத்து வழங்குவதே இன்றைய செய்தி நிகழ்ச்சியின் சிறப்பு.