மலிவான விலையில் அதிநவீன வசதிகளுடன் "நோக்கியா 4.2" ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்

மலிவான விலையில் அதிநவீன வசதிகளுடன் "நோக்கியா 4.2" ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்
மலிவான விலையில் அதிநவீன வசதிகளுடன் "நோக்கியா 4.2" ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்

சென்னை: நோக்கியா ஃபோன்களின் இல்லமான, ஹெச்எம்டி குளோபல், முற்றிலும் குறைந்த செலவிலான நவீன தொழில் நுட்பத்துடன் இந்தியாவிற்கு வரவிருக்கும் நோக்கியா 4.2, ஸ்மார்ட்ஃபோனை முதன்முறையாக இன்று அறிமுகப்படுத்தியது. 

செதுக்கிய கண்ணாடி வடிவமைப்பு மற்றும் வெளிப்புறத்தில் அழகுறகாட்சி தரும் செல்ஃபீயுடன் கூடிய டிஸ்ப்ளேயுடன் மிகவும் மெல்லிய வடிவமைப்பில், பின்புறத்தில் இரட்டை கேமரா, பயோமெட்ரிக்ஃபேஸ் அன்லாக் வசதியுடனும் கூடிய இதன் கம்பீரமான தோற்றம் மற்றும் நவீனதொழில்நுட்பத்துடன் கூடிய குவால்காம்ஸ் நேப்ட்ராகன் சிப்செட், அனைத்தும் நவீனமான ஆண்ட்ராய்ட் 9 பையின் ஆற்றலுடன் கிடைக்கிறது.

ஹெச்எம்டி குளோபலின் துணைத் தலைவர்  மற்றும் இந்தியப்பிரிவின் தலைவர் அஜய்மேத்தா கூறினார் : “ஒரு மலிவான ஸ்மார்ட்ஃபோன் வாங்குவதால் அற்புதமான அம்சங்கள் மற்றும் நவீனநாகரீகவசதிகள் இல்லாமலிருக்கக் கூடாது. நமது ரசிகர்களுக்காக முதன்முறையாக இந்தியாவில் வந்திருக்கும் சீரியஸ் நோக்கியா 4.2 ஸ்மார்ட்ஃபோனை அறிமுகமாகப்படுத்துவதில் நான் பெருமிதமடைகிறேன். அடாப்டிவ்பேட்டரி போன்ற ஏஐ ஆற்றல் அம்சங்களுடன், நவீன மற்றும் பிரத்யேகமான வழியில் உங்கள் ஸ்மார்ட்ஃபோனுடன் தொடர்புகொள்ள தனித்துவமான கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்; பயோமெட்ரிக்ஃபேஸ் அன்லாக், முதல் நவீனமான ஆண்ட்ராய்ட் 9 பையின் ஆற்றலுடன் அடுத்த 2-எழுத்து ஆண்ட்ராய்ட் அப்டேட்கள் உறுதியாக கிடைப்பதுடன்; நோக்கியா 4.2 வில் நாங்கள் தயாரிக்கும் அனைத்து ஸ்மார்ட்ஃபோன்களும் இந்த உறுதிமொழிப்பாங்கில் கிடைக்கும் – மேலும் மெருகூட்டப்பட்டு – உங்கள் கைகளில் சிறப்பான அனுபவத்தை கொண்டுசேர்க்கும்.”

ஹெச்எம்டி குளோபலின், தெற்கு மற்றும் மேற்கு இந்தியப் பொது மேலாளர் டி.எஸ். ஸ்ரீதர்கூறினார் :“பூர்விகா மொபைல்ஸ்,  ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நீண்ட கால நம்பிக்கைக்குரிய பங்குதாரராக விளங்கி வருகின்றனர். அவர்கள் தமிழ்நாட்டின் வாடிக்கையாளர்களுடன் உறுதியான தொடர்பில் இருந்து கொண்டு அவர்கள் மூலம் கிடைக்கும் அலாதியான அனுபவம் ஈடிணையற்றது. இன்று புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நோக்கியா 4.2 வினை பூர்விகாவின் வாடிக்கையாளர்களுக்கு மே 14ம்தேதி முதல் துவங்கி பிரத்யேகமான 7 நாட்கள் விற்பனை செய்வதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். இந்த ஸ்மார்ட்ஃபோன் மிகக் குறைந்த செலவில் அற்புதமான பயனர் அனுபவத்தை வாடிக்கையாளர்களின் கைகளுக்கு அளித்து மகிழ்விக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்”

உயர்தரமான ஏஐ உங்கள் விரல் நுனியில் கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் பொருத்தப்பட்டிருப்பதால், நோக்கியா 4.2 முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை உங்கள் ஸ்மார்ட்ஃபோனுக்கு அளிக்கும். வழிகாட்டுதல்கள், கால்கள் செய்வது, இசை கேட்பது அல்லது பதில்கள் பெறுவது, என்று எந்த உதவி வேண்டுமானாலும், ஒரே ஒரு முறை கூகுள் அசிஸ்டண்டை அழுத்துவதன் மூலம், கூகுள் அசிஸ்டண்ட், உங்களுக்குத் தேவையானதை செய்வதிலும் முன்பை விட வெகுவேகமாக தேடும் விஷயங்களைப் பெற்றுதரும். உங்களுடைய இன்றைய நாளின் நிகழ்வுகளை, போக்குவரத்து விவரங்கள், செலுத்த வேண்டிய பில்கள், உங்கள் நாட்காட்டியில் குறித்திருப்பதைப்போல் எந்த ஒரு சந்திப்பிலும் எப்போதும் தவறாமல் கலந்து கொள்ளும் வகையில் அறிவார்ந்த ஆலோசனைகள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் உடன் காட்சிக் கண்ணோட்டமாக கண்டறிந்து கொள்வதற்கு கூகுள் அசிஸ்டெண்ட் பட்டனை இருமுறை அழுத்தலாம். அதே பட்டனை நீண்ட நேரத்திற்கு அழுத்தினால், வாக்கி-டாக்கி முறை செயல்படுத்தப்பட்டு, அழுத்தம் விடுபடும் வரை கூகுள் அசிஸ்டெண்ட் உங்கள் நீண்ட வாக்கியக் கேள்விகளைக் கேட்கமுடியும்.

உங்கள் ஸ்மார்ட்ஃபோனைத் திறக்ககைகளை உபயோகிக்காத, வேகமான முறையில் திறக்கவல்ல, ஃபேஸ் அன் லாக் வசதி அல்லது கேமராஆப் மற்றும் இருபக்க கேமராக்களையும் பயன்படுத்த வல்லபோத்தி எடுக்கும் வசதிகளின் ஆப்ஸ்களை வேகமாக திறந்து செயல்படுத்த உதவும் பிரத்யேகமான கூகுள் அசிஸ்டண்ட் அம்சங்கள் நோக்கியா 4.2 வில் ஏஐ ஆற்றலுடன் இணைந்திருக்கும் பல முதன்மையான அம்சங்களாகும். இந்த நோக்கியா 4.2 மொபைலில் உங்கள் செட்டிங்க்களை தேர்ந்தெடுத்த பிறகு உங்கள் ஃபோனைத்திறக்காமலேயே கூகுள்அசிஸ்டண்டை அணுகலாம். ஒருடைமர், ரிமைண்டர்களை வரிசைப்படுத்துதல், இசை அல்லது கேள்விகளைக் கேட்பது போன்ற அடிப்படை அம்சங்களை இதன் மூலம் நீங்கள் செயல்படுத்தலாம்.

நவீன கண்டு பிடிப்புகளுடன் அழகுற தயாரிக்கப்பட்டது நோகியா 4.2 ஸ்மார்ட்ஃபோனானது, கையடக்கமான அளவிலும் விளிம்பின் முனைவரையிலான ’செல்ஃபீ-நாச்’ உடன் கூடிய டிஸ்ப்ளேயின் மூலம் 8.4 மிமீ. அளவில் மெல்லியதாக இருக்கும் வகையில் கிடைக்கிறது.  முன்னும், பின்னு ம்நேர்த்தியான முறையில் கண்ணாடியுடன் கூடிய வடிவமைப்பின் காரணமாக நீண்டகால பயன்படுகிறது, இதன் குறைவான எடை மற்றும் உட்புற உலோக அமைப்பு மற்றும் சாடின்-பூச்சுகொண்ட பாலிகார்பனேட் ஃப்ரேம் ஆகியவற்றுக்கு நன்றி.

இதன் வடிவைப்பின் மேற்புறம்பவர் பட்டனுடன் ஒளிரும் இயற்கையான ப்ரீத்திங் லைட் மூலமாக கிடைக்கும் அறிவிப்புகள் மூலமாக உங்கள் ஃபோனை கவனிக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

உங்களுக்கு அதிகளவில் செயற்பாட்டுக்குத் தேவையான, உங்கள் விருப்பமான விளையாட்டுகளை விளையாடவும் திரைப்படங்களை தொய்வின்றிப்பார்க்கவும் முடியும் வகையில் நோக்கியா 4.2 வில் பொருத்தப்பட்டுள்ள சீரிய குவால்காம்ஸ்நேப் டிராகன் 439 ஆக்டா-கோர்சிப்செட் மூலம் கிடைக்கிறது.

மல்டி கேமரா இமேஜிங் போன்ற முதன்மை நிலை இமேஜிங் வசதிகளுடன் ஒரு புதிய விலையில், கிடைக்கும் நோக்கியா 4.2 வின் இருமடங்கு டெப்த்-சென்சிங் பின்புற கேமரா அற்புதமான தருணங்களை அழகுற படம் பிடிக்கிறது. டெப்த் சென்சாருடன் கூடிய 13 மெகாபிக்ஸல் கேமரா உடன், நீங்கள் அடுத்த கட்ட புகைப்பட வடிவங்களை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பிரமிக்கும் வகையில் பதிவேற்றி மகிழலாம். 

ஏஐ மற்றும் மெஷின்லெர்னிங் ஆற்றலுடன் கூடிய கூகுள்ஃபோட்டோ சில் நீங்கள் பகிரக்கூடிய தன்மை வாய்ந்த புகைப்படங்களை உருவாக்கி, கூகுள்லென்ஸ் உடன் அதைப்பற்றி மேலும் அறிந்து கொள்வதன் மூலம், உங்கள் சுற்றுப்புறத்துடன் புதுமையான வகையில் தொடர்புகொண்டு, நீங்கள் பார்க்க நினைப்பதை அதிவேகமாக தேடிப்பிடிக்கலாம். நோக்கியா 4.2 வின்மேம்பட்ட கேமரா செயலியின் மூலம் புரோக்கே வகையில் செயல்படுத்தி அல்லது ஒரே நேரத்தில் பல புகைப்படங்களை குறைந்த வெளிச்சத்தில் HDR வகையில் படம் பிடித்து, மேலும் உங்கள் உட்புறகலைஞனை வெளிக்கொணர்ந்து, அவற்றை அட்வான்ஸ்ட் அல்காரித முறைகளைப் பயன்படுத்தி அதிக வெளிச்சம், குறைந்த அளவுமாசு, அடர்த்தியான நிறங்கள், சிறந்த மாறும் வரம்பில் அவற்றை ஃபியூஸ் செய்யலாம்.

ஆண்ட்ராய்ட் ஒன் உடன் ஒன்றிணைந்த ஆண்ட்ராய்ட் 9 பை தூய்மையும், பாதுகாப்பும், இன்றைய தேதி வரையிலான மேம்பாடுடன் கூடியது நோக்கியா 4.2  ஸ்மார்ட்ஃபோன் ஆண்ட்ராய்ட் 9 பை உடன் வழங்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்ட்ஒன் குடும்பத்தில் நோக்கியா ஸ்மார்ட்ஃபோன்களின் வரிசைகளை இணைப்பதால், நவீன முறையிலான கண்டுபிடிப்புகளும் மென்பொருள் அனுபவமும் கிடைக்கிறது. ஆண்ட்ராய்ட் ஒன்உடன் கிடைக்கும் நோக்கியா ஸ்மார்ட்ஃபோனில் அதிகளவு ஸ்டோரேஜ் மற்றும் நீண்ட ஆயுள் கொண்ட பேட்டரியுடன் முன்று ஆண்டுகள் வரை மாதாந்திர பாதுகாப்பு இணைப்பதிவுகள் மற்றும் இரண்டு பிரதான ஓஎஸ் அப்டேட்கள் உடன் கிடைக்கிறது.

ஏஐ ஆற்றலுடன் கூடிய சிறப்பம்சங்கள் மூலம் உங்கள் ஸ்மார்ட்ஃபோனை மேம்பட்டவிதத்தில், வேகமாகவும், நீங்கள் உபயோகிக்கும் பாங்கிற்கு ஏற்றவாறும் பயன்படும் வகையில் ஆண்ட்ராய்ட் 9 பை-ன் அம்சங்கள் இருப்பதால், உங்கள் ஸ்மார்ட்ஃபோன் அனுபவம் உபயோக காலத்துடன் மேலும் மெருகேருகிறது. நீங்கள் அதிகமாக பயன்படுத்தாத ஆப்களின் உபயோகத்தை நிறுத்தும் வகையில் அடாப்டிவ் பேட்டரி வசதி அமைந்து, மேலும் ஆப் செயல்பாடுகள் மூலம் நீங்கள் அடுத்த பணி என்னவென்று விரைவில் கணிக்கப்படுகிறது. இந்த வசதிகளின் மூலம் உங்கள் ஸ்மார்ட்ஃபோனின் செயல்பாடும் உங்கள் ஒட்டுமொத்த ஆண்ட்ராய்டு அனுபவமும் சீர்படுத்தப்படுகிறது.

நோக்கியா 4.2 ஸ்மார்ட் ஃபோனில் முன்று ஆண்டுகள் வரை மாதாந்திர பாதுகாப்பு இணைப்பதிவுகள் மற்றும் இரண்டு பிரதான ஓஎஸ் அப்டேட்கள் ஆண்ட்ராய்ட் ஒன் திட்டப்படி உறுதியாக கிடைக்கும். மேலும் கூகுள் பிளேப்ரொடெக்ட் மூலம் ஒரு நாளைக்கு 50 பில்லியன் ஆப்கள்ஸ்கேன் செய்யப்பட்டு, உங்கள் ஃபோனை மால்வேரிலிருந்து காப்பற்றி சந்தையின் ஸ்மார்ட்ஃபோன்களில் நோக்கியா 4.2 ஸ்மார்ஃபோனை அதிக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக கிடைக்கிறது. உயர்தரமான புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும் வகையில் வரம்பற்ற வசதி யுடன் கூடிய கூகுள்ஃபோட்டோஸ் மற்றும் நாள் முழுவதும் எல்லா பணிகளையும் செய்யவல்ல கூகுள் அசிஸ்டண்ட் போன்ற புதுமையான சேவைகளை சுலபமாக பயன்படுத்தும் வகையில் கிடைக்கிறது.

கூடுதலாக, நோக்கியா 4.2 ஸ்மார்ட் ஃபோனில் பின்புறம் பாதுகாப்பான பயன்பாட்டிற்காக ஃபிங்கர் பிரிண்ட் சென்சா ர்உடனும் உங்கள் நிறுவனத் தேவைகளுக்காக பயன்படுவதற்கு ஏற்றவாறு அமைந்த ஆண்ட்ராய்ட் எண்டர்பிரைஸ் பரிந்துரை செய்த புரோக்ராம் உடன் கிடைக்கிறது.

கிடைக்கக் கூடிய தன்மை: -

நோக்கியா 4.2 ஸ்மார்ட் ஃபோன் கருப்பு (பிளாக்) மற்றும் இளஞ் சிவப்பு மணல் நிறம்( பிங்க்) என இரண்டு வண்ணங்களில் 3/32 ஜிபி அளவிலான வேறுபட்ட வகைகளில் ரூ.10,990 சிறப்பு சலுகை விலையில் கிடைக்கிறது. மே 14 முதல் 20 வரை சென்னை நகரம் முழுவதிலுமுள்ள பூர்விகா மொபைல் கடைகளிலும் அதன்பிறகு 21 மே முதல் இந்தியா முழுவதிலுமுள்ள மொபைல் ரீடைல் கடைகளிலும் Nokia.com/phones இணையதளத்திலும் கிடைக்கும்.

ஆஃபர்கள்: - 

நோக்கியா 4.2 வாடிக்கையாளர்களுக்கு எங்கள் பங்குதார நிறுவனமான செர்விஃபை மூலமாக அளிக்கப்படும், நோக்கியாஸ் கிரீன் ப்ரொடக்ஷன் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் வரும் ரூ. 3,500 மதிப்புள்ள ஆறுமாதம் வரை ஸ்கிரீன் ரீப்ளேஸ் மெண்ட் இலவசமாகத் தரப்படுகிறது. சட்ட திட்டங்களுக்குட்பட்டது.

HDFC வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் பயன்படுத்தி EMI மற்றும் வழக்கமான பரிவர்த்தனைகள், ஆஃப்லைன் ஸ்டோர்களில் இருக்கும் பைன்லேப் ஸ்டெர்மில்ஸ் மூலமாக, நோக்கியா 4.2 வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10% கேஷ்பேக் உடன் கிடைக்கிறது. HDFC வங்கியின் கன்சூமர் ஃபைனான்ஸ் மூலமாக வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10% கேஷ்பேக் கிடைக்கிறது. இந்த சலுகை 10 ஜூன் 2019 வரை ரீடைல் கடைகளில் கிடைக்கும். சட்ட திட்டங்களுக்குட்பட்டது.

வோடாஃபோன் மற்றும் ஐடியா வாடிக்கையாளர் ஒவ்வொருவருக்கும் ரூ. 50/- மதிப்பிலான 50 வவுச்சர்கள் கொண்ட ரூ.2,500 உடனடி கேஷ்பேக் தரப்படும். இந்த வவுச்சர்களை ரூ. 199 மற்றும் அதற்கு மேலும் ரீசார்ஜ் செய்யும் போது உபயோகப்படுத்திக் கொள்ளலாம். சட்ட திட்டங்களுக்குட்பட்டது.