ஒரே நாடு ஒரே ரே‌ஷன் கார்டு திட்டம் முதலமைச்சர் நாளை காலை தொடங்கி வைக்கிறார்

ஒரே நாடு ஒரே ரே‌ஷன் கார்டு திட்டம் முதலமைச்சர்  நாளை காலை  தொடங்கி வைக்கிறார்
ஒரே நாடு ஒரே ரே‌ஷன் கார்டு திட்டம் முதலமைச்சர் நாளை காலை தொடங்கி வைக்கிறார்

ஒரே நாடு ஒரே ரே‌ஷன் கார்டு திட்டம்  முதலமைச்சர்  நாளை காலை  தொடங்கி வைக்கிறார்

 

இடம் பெயரும் தொழிலாளர்களின் பசியை போக்க மத்திய அரசு ஒரே நாடு, ஒரே ரே‌ஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் வெளி மாநிலங்களைச் சேர்ந்த கார்டுதாரர்கள் தமிழகத்தில் உள்ள ரே‌ஷன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியும்.

இதேபோல் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மற்ற மாநிலங்களுக்கு சென்றால் அங்குள்ள ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்கி கொள்ளலாம்.

இதற்காக ஒவ்வொரு ரே‌ஷன் கடைகளிலும் பயோமெட்ரிக் எனப்படும் கைரேகை கருவி வைக்கப்பட்டுள்ளது.

இதுவரை ரே‌ஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும்போது ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டை ஸ்கேன் செய்து அதன் அடிப்படையில் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் நாளை முதல் கைரேகை பதிவு செய்தால்தான் பொருட்கள் வாங்க முடியும்.

இதுவரை ரே‌ஷன் கடைக்கு செல்ல விரும்பாதவர்கள் வேலைக்காரரிடம் கார்டை கொடுத்து பொருட்கள் வாங்கி வந்தனர். ஆனால் இனிமேல் அப்படி பொருட்கள் வாங்க முடியாது.

ஒவ்வொரு ரே‌ஷன் கார்டிலும் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் மட்டுமே ரே‌ஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்க இயலும். குடும்ப உறுப்பினர்கள் கைரேகை பதிவு செய்தால்தான் ரே‌ஷன் பொருட்கள் பெற முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஒவ்வொரு ரே‌ஷன் கடைகளிலும் கைரேகை பதிவு செய்யும் வசதியுடன் கூடிய நவீன பாயிண்ட்ஆப் செயல் கருவி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து ரே‌ஷன் கடைகளுக்கும் கைரேகை பதிவு செய்யும் கருவி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் அனைத்து ரே‌ஷன் கடைகளுக்கும் இந்த கருவி சென்று அடைந்துள்ளது.

இந்த திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை தொடங்கி வைக்கிறார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆர்.காமராஜ், செல்லூர் ராஜூ மற்றும் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

இந்த திட்டத்தின் மூலம் வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் உள்ள ரே‌ஷன் கடைகளில் கைரேகையை பதிவு செய்து அரிசி, கோதுமை வாங்கி கொள்ளலாம்.

இதற்காக அவர்களிடம் மத்திய அரசு நிர்ணயித்துள்ள தொகை வசூலிக்கப்படும். இதே போல் மற்ற மாநிலங்களில் உள்ள தமிழக கார்டுதாரர்களும் அங்குள்ள ரே‌ஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளலாம்.