சென்னையில் புரட்சிகரமான 65 அங்குல அளவுள்ள பிலிப்ஸ் ஆம்பிலைட் தொலைக்காட்சி அறிமுகம்

சென்னையில் புரட்சிகரமான 65 அங்குல அளவுள்ள பிலிப்ஸ் ஆம்பிலைட் தொலைக்காட்சி அறிமுகம்

சென்னையில் புரட்சிகரமான 65 அங்குல அளவுள்ள பிலிப்ஸ் ஆம்பிலைட் தொலைக்காட்சியை டிபிவி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தியுள்ளது

வலிமையான முகவர் கட்டமைப்பைக் கொண்டுள்ள இந்தியாவில் தனது தயாரிப்பை விரிவுபடுத்துகிறது புதிய பிலிப்ஸ் ஆம்பிலைட் தொலைக்காட்சியானது சென்னையில் உள்ள அனைத்து விவேக்ஸ் மற்றும் பிலிப்ஸ் விற்பனை நிலையங்களில் கிடைக்கும்.

சென்னை, ஜூன் 26, 2019: தொலைக்காட்சி பார்க்கும் ரசிகர்களின் அனுபவத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில், டிவிபி தொழில்நுட்பமானது 65 அங்குலம் அளவு கொண்ட ஆம்பிலைட் தொலைக்காட்சியானது சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 6700 வரிசை கொண்ட பிரிவில் பிலிப்ஸ் ஆம்பிலைட் தொலைக்காட்சியானது மிகப்பெரிய திரையைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. அல்ட்ரா ஸிலிம் 4கே யூஎச்டி எல்இடி ஸ்மார்ட் டிவியாக அது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொலைக்காட்சியானது இப்போது தமிழகம் முழுவதும் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதன் விலை ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 999 ஆகும்.

ஆம்பிலைட் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் தொலைக்காட்சியானது, பார்வையாளர்களுக்கு வேறொரு புதிய அனுபவத்தை நிச்சயம் ஏற்படுத்தும். துல்லியத்தன்மை, ஆழமான, தெளிவான வண்ணம் என பல்வேறு சிறப்பு அம்சங்களை தொலைக்காட்சி பெற்றிருக்கிறது.

இந்தியாவில் தொலைக்காட்சி மற்றும் ஆடியோ தயாரிப்புத் துறையில் பிலிப்ஸ் நிறுவனத்துடன் டிபிவி தொழில்நுட்பமானது அண்மையில் கூட்டாக இணைந்தது. இப்போது புரட்சிகரமான தொழில்நுட்பத்துடன் புதிய தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து, டிபிவி தொழில்நுட்பத்தின் இந்தியப் பிரிவு தலைவர் (வர்த்தகம்) திரு அருண் மேனன் கூறியது:- "பிலிப்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ள தொலைக்காட்சியானது, திரைக்கு அப்பாலும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தைத் தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சென்னையில் உள்ள விவேக்ஸ் மற்றும் பிலிப்ஸ் ஷோரூம்களின் வழியாக விற்பனை செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களின் மிகச்சிறந்த வாடிக்கையாளர்களுக்கு நல்லதொரு அனுபவத்தைத் தர வேண்டும் என்பதே எங்களது முக்கிய நோக்கமாகும். மேலும், இந்த விற்பனையின் மூலமாக சென்னையில் சில்லறை விற்பனைப் பிரிவில் தடம் பதிக்கிறது. சென்னை நகரமானது தொழில்நுட்ப சார்ந்த நகரமாக மாறி வருகிறது. டிபிவி நிறுவனத்தின் தடத்தை விரிவாக்கி மாற்றத்தை ஏற்படுத்துவதை சென்னை நகர மக்கள் ஏற்றுக் கொண்டு அதிநவீன புதிய தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுவார்கள் என்று அருண் மேனன் தெரிவித்தார்."

இந்தப் புதிய தயாரிப்பு பற்றி விவேக்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் பி.கே.சங்கரநாராயணன் கூறியது:-

சில்லறை விற்பனைத் துறையில் விவேக்ஸ் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. தனது வடிவமைப்பு மற்றும் புதுமுக சிந்தனைகள் மூலமாக உயர்தரமான தயாரிப்புகளை சிறந்த முறையில் காட்சிப்படுத்துகிறது. அதன் அடிப்படையில், டிபிவி நிறுவனத்துடன் இணைந்து புதிய தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிலிப்ஸின் இப்போதைய தொலைக்காட்சி, ஆடியோ சிஸ்டமஸ்களை விவேக்ஸ் நிறுவனம் விற்பனை செய்யவுள்ளது. இந்தப் புதிய தொலைக்காட்சியானது பார்வையாளர்கள் பார்த்து ரசிப்பதற்கான ரசனையை நிச்சயமாக உயர்த்தும் என்றார்.
 
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இப்போது நடைபெற்று வருகிறது. இதையொட்டி, கிட் த ஹாட்ரிக் என்ற சலுகையை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. ஜூலை 7-ஆம் தேதி வரை இந்தச் சலுகை அளிக்கப்படுகிறது. இது அனைத்து வகையான பிலிப்ஸ் ஆடியோ மற்றும் தொலைக்காட்சிகளுக்கு பொருந்தும். இதில் ஒரு அதிர்ஷ்டசாலி தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 65 அங்குல அளவுள்ள ஆம்பிலைட் தொலைக்காட்சி பரிசாகக் கிடைக்கும்.

டிபிவியின் சில்லறை வர்த்தகமானது, 200-க்கும் மேற்பட்ட முகவர்களின் மூலமாக மேற்கொள்ளப்படுகிறது. இதன் தயாரிப்புகள் 35 ஆயிரத்துக்கும் அதிகமான ஸ்டோர்கள் வழியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.