எல்.முருகனுக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து

எல்.முருகனுக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து
எல்.முருகனுக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய அமைச்சர் முருகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து எழுதியுள்ள கடிதம்: உங்கள் பிறந்த நாளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மனித வாழ்வு என்பது எல்லாம் வல்ல இறைவனின் அருட்கொடையாகும். ஒரு அரசியல்வாதியாக உங்களது வாழ்க்கையை பொது நலனுக்காகவும், நாட்டின் சேவைக்காக அர்ப்பணிப்பது சவுபாக்கியம். அரசாங்கத்தின் என்னுடன் சக அமைச்சராக பணியாற்றும் தங்களின் அர்ப்பணிப்பு, நம்பிக்கை, பணியின் திறமை ஆகியவற்றை நான் பாராட்டுகிறேன். தேசத்தின் வளர்ச்சிக்காக தங்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.