சுதாங்கனின் ‘படித்ததும் ரசித்ததும்’

சுதாங்கனின் ‘படித்ததும் ரசித்ததும்’

கற்றலிற் கேட்டலே நன்று என்பது நமது முதியோர் வாக்கு. படித்து நம் மனதில் பதியும் விஷயங்களை விட, மற்றவர் சொல்லி நாம் கேட்கும் விஷயங்கள்தான் நம் மனதில் ஆழப் பதியும்.  அனுபவம் மிக்கவர்கள் தாங்கள் படித்ததையும், ரசித்ததையும் சுவையாக சொல்லும்போது அது நம் மனதில் ஆழமாக பதிந்து விடும். அப்படிப்பட்ட ஒரு பகிர்தலே சுதாங்கனின் ‘படித்ததும் ரசித்ததும்’ என்ற இந்த நிகழ்ச்சி. 
1967ம் வருடம் தமிழகத்தில் மிகப் பிரபல சம்பவமாக உருவெடுத்த எம்.ஆர். ராதா, எம்.ஜி.ஆரை துப்பாகியால் சுட்ட வழக்கைப் பற்றி வெளியான ஒரே புத்தகம் இவர் எழுதிய சுட்டாச்சு சுட்டாச்சு என்ற புத்தகம்தான்.

நாடக நடிகர், திரைப்பட நடிகர், சிறுகதை நாவல் ஆசிரியர் என பன்முகத்துக்குச் சொந்தக்காரரான சுதாங்கன் ஒரு சிறந்த எழுத்தாளரும் கூட. பல்வேறு பிரபல நாளிதழ்களில் ஆசிரியராக பணியாற்றியவர். தமிழ் இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸத்தில் பெயர் பெற்றவர்.

ஊடகத்துறையின் பரிணாம வளர்சியில் காலத்துக்கேற்றவாறு தன்னை சமப்படுத்திக் கொண்டவர். பிரபல அரசியல் விமர்சகர் என்று பெயர் பெற்றாலும், தமிழக சூழலில் அரசியல், சினிமா என்று இரு வேறு துறைகளிலும் ஒரு தேர்ந்த ஊடகவியலாளராக தனது முத்திரையை ஆழமாகவும், அழுத்தமாக பதித்தவர்.  
தனது இத்தனை அனுபவங்களையும் நமது புதுயுகம் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியில் நம்மோடு பகிர்ந்து கொள்ளப்போகிறவர் மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன். உலக விஷயங்களிலிருந்து உள்ளுர் விஷயங்கள் வரையிலும், சினிமா, கிரிக்கெட் உள்பட பல தளங்களில் அவர் படித்ததையும் ரசித்ததையும் நம்மோடு சுவாரஸ்யமாக பகிர்ந்துகொள்வதை நமது புதுயுகம் தொலைக்காட்சியில்  பார்த்து ரசிக்கலாம்.