புதிய தலைமுறை தொலைக்காட்சியில் “சைபர்திரை”

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் “சைபர்திரை”

தமிழ் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக.. இணைய வழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், “சைபர்திரை” என்ற புதிய நிகழ்ச்சி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 10:00மணிக்கு ஒளிபரப்பா கிறது.

 இந்நிகழ்ச்சி, அந்தந்த வாரங்களில் நடந்த சைபர் குற்றங்கள் குறித்தும், அதிலிருந்து பாதுகாப்பாக இருப்பது குறித்தும் தெளிவாக விளக்குகிறது. அப்ளிகேஷன்களின் ஆபத்து, மொபைல் திருடப்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்,  சர்வதேச ஹேக்கர்களிடமிருந்து எவ்வாறு தப்பிப்பது, பேங்கிங் ஃப்ராடு, வைரஸ் அட்டாக் என, ஒட்டுமொத்த சைபர் குற்றங்கள் குறித்தும் சைபர்திரை, திகிலாக திரையிடுகிறது. இந்த நிகழ்ச்சியை எழுதி இயக்கும் ஹமீதுசிந்தா, தொகுப்பாளராகவும் தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 10:00மணிக்கு புதிய தலைமுறை ஒளிபரப்பாகிறது.