எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தில் தொழில்நுட்ப மாநாடு

எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தில் தொழில்நுட்ப மாநாடு

எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தில் சமூக கண்டுபிடிப்புகளின் முன்னோடி பற்றிய 2 நாள் தொழில்நுட்ப மாநாடு அணுசக்தி விஞ்ஞானி ஆர். சிதம்பரம் தொடங்கி வைத்தார்

எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்ற சமூக கண்டுபிடிப்புகளின் முன்னோடி என்ற தேசிய அளவிலான 2 நாள் தொழில்நுட்ப மாநாட்டினை மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ஆர் ராஜகோபால் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.இதில் மும்பை டாடா ஆராய்ச்சி மைய பேராசிரியர் டாக்டர் அதுல் குருது ,புவியியல் வல்லுநர் டாக்டர் சந்திர தாகூர் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாக பங்கேற்றனர்.

எஸ்ஆர்எம் அறிவியல் தொழில் நுட்ப நிறுவனத்தின் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப துறையின் சார்பில் சமூக வளர்ச்சிக்கான கண்டுபிடிப்புகளின் முன்னோடி என்பது பற்றிய 2 நாள் தேசிய மாநாடு நடைபெறுகிறது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஐஐடி என்ஐடி எம்ஐடி மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்கள் பேராசிரியர்கள் என120க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். இதன் தொடக்க  விழா எஸ்ஆர்எம் கல்வி நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள டாக்டர் டி.பி.கனேசன் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை மாநாடு அமைப்பு குழு மாணவி அனாமிகா வரவேற்றார்நிகழ்ச்சிக்கு எஸ்ஆர்எம் அறிவியல் தொழில் நுட்ப நிறுவனத்தின் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப துறை இயக்குனர் முனைவர் முத்தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ஆர்.சிதம்பரம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று குத்து விளக்கேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தும் மாநாட்டி சிறப்பு மலரினை வெளியிட்டு பேசியதாவது:    

நாட்டில் வாழ்க்கை தரம் எடுத்து கொண்டால் நகர்ப்புற மக்களுக்கு கிடைக்கும் வசதிகள் கிராம மக்களுக்கு கிடைப்பதில்லை. எனவே அவர்களுக்கும் அந்த வசதி கிடைக்க வேண்டும்இதற்கு நாட்டில் உள்ள பொறியாளர்களின் பங்கு அவசியமாக உள்ளது. இந்திய நாடு வின் வெளி ஆராய்ச்சியில் சாதனை படைத்துள்ளது. சந்திரனுக்கு செயற்கை கோள் அனுப்பியது.2022ல் 2வது சந்திராயன் அனுப்பபட உள்ளதுஇதற்கான பணிகள் நடந்து வருகிறது.

இந்திய நாடு அணுசக்தி துறையில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கண்டு வருகிறதுவல்லரசு நாடுகளுக்கு இணையாக நல்ல பணிகளுக்காக அணு ஆராய்ச்சி பணிகளை நடத்தி வருவதின்

பயனாக அணுகுண்டு சோதனை நடத்தியுள்ளோம்.மூதல் அணுகுண்டு சோதனை 1975 ம் ஆண்டில் போக்ரானில் நடத்தப்பட்டது. இரண்டாவது சோதனை அதே பகுதியில் 1998 ம் ஆண்டில் நடத்தப்பட்டது.

இதில் மும்பையில் உள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சி மையத்தின் முதுநிலை பேராசிரியர் முனைவர் அதுல் குருது, இமாலயம் மற்றும் புவியியல் வல்லுநர் முனைவர் விக்ரம் சந்திர தாகூர் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக பங்கேற்று உரையாற்றினர். நிகழ்ச்சியில் நிறுவனத்தின் பேராசிரியர்கள் மேலாண்மை டீன் முனைவர் வி.எம்.பொன்னைய்யா, வளாக வாழ் இயக்குனர் முனைவர் திருமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.