ரஷ்யாவில் இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு 93 பேர் பலி
ரஷ்யாவில் இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு 93 பேர் பலி
மாஸ்கோ: ரஷ்யாவில் இசை நிகழ்ச்சி அரங்கிற்குள் புகுந்த ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 93 பேர் பலியாகினர்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் குரோகஸ் சிட்டி ஹால் என்ற இடத்தில் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.அப்போது ரஷ்ய ராணுவ உடை அணிந்திருந்த ஐ.எஸ்.ஐ.எஸ்., நபர்கள் 5 பேர், இசை நிகழ்ச்சி அரங்கிற்குள் நுழைந்து அங்கிருந்த பார்வையாளர்கள் கூட்டத்தின் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
இதில் 93 பேர் சம்பவ உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டடோர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் தீ வைப்பு சம்பவங்களும் நடந்தது. மாஸ்கோ உள்ளிட்ட முக்கிய நகரங்களின் கண்காணிப்பை கிரெம்ளின் நிர்வாகம் அதிகப்படுத்தியுள்ளது.