கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு தமிழகத்தில் சிறப்பு மருத்துவமனை
            கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கென 500 படுக்கைகள் கொண்ட பிரத்தியேகமான மருத்துவமனையாக ஓமந்தூரார் மருத்துவமனை செயல்பட தொடங்கியுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முக்கிய அம்சமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக எல்லா மருத்துவமனைகளிலும் தனி வார்டு ஒதுக்கப்படுகின்றது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35ஆக உள்ளது.
இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில், தனி மருத்துவமனை தேவைப்படும் என்பதற்காக ஓமந்தூரார் மருத்துவமனையில் ஒரு பகுதியில் 500 படுக்கைகள் அமைக்கப்பட்டு, அது இன்று முதல் சிறப்பு மருத்துவமனையாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
                        



        
        
        
        
        
                        
                        
                        
                        
                        
        
        
        
        
        