இன்று தொற்று கண்டறியப்பட்ட 50 பேரில் 48 பேர் ஒரே இடத்தில் இருந்து வந்தவர்கள்

இன்று தொற்று கண்டறியப்பட்ட 50 பேரில் 48 பேர் ஒரே இடத்தில் இருந்து வந்தவர்கள்

தொற்று வந்தவர்கள் சிகிச்சைக்கு முன்வந்தால் தான் நோயை குணப்படுத்த முடியும்.

தமிழகத்தில் கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு .கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 6 ஆக உயர்வு

மூச்சுத் திணறல் ஏற்பட்டதில் பெண் ஒருவர் பலியான நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது .சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் கொரோனாவிற்கு பலி.

தமிழகத்தில் வீட்டு கண்காணிப்பில் 91,581 இருப்பவர்கள்.5016 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

புதிதாக 5 லட்சம் கொரோனா பரிசோதனை கருவிகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது, ஏப்ரல் 8-9 தேதிகளில் 2.5 லட்சம் கருவிகள் வழங்கப்படும் - ஐசிஎம்ஆர்

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 10 மாத குழந்தை உட்பட 5 பேர் குணமடைந்தனர் 

*கொரோனா சிகிச்சைக்கு முதலாவதாக அனுமதிக்கப்பட்ட 25 வயது மாணவியும், குணமடைந்து வீடு திரும்பினார் - மாவட்ட ஆட்சியர்