முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சந்திப்பு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சந்திப்பு
சென்னை,
தமிழகத்தில் பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் தொடர்ந்து திருத்தணி, திருவொற்றியூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் வேல் யாத்திரை நடத்த முயன்ற பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி பாஜக தொடர்ந்த வழக்கிலும் உயர்நீதிமன்றம் பாஜகவிடன் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
இதனைத்தொடர்ந்து இன்று காலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக தமிழக தலைவர் எல்.முருகன், “17ம் தேதி முதல் திட்டமிட்டபடி வேல் யாத்திரை தொடங்கும். இந்த வேல் யாத்திரையில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் இன்று மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, பாஜக தலைவர் எல்.முருகன் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த திடீர் சந்திப்பு நடைபெற உள்ளது. மேலும் இந்த சந்திப்பில் வேல் யாத்திரை குறித்து விளக்கம் அளிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.