இந்திய சர்வதேச கிரிக்கெட் வீரர், காஷ்மீரி பண்டிட் குடும்பத்தில் நவம்பர் 27, 1986 அன்று உத்தரபிரதேசத்தின் முராத்நகரில் பிறந்தார்.
இந்திய சர்வதேச கிரிக்கெட் வீரர், காஷ்மீரி பண்டிட் குடும்பத்தில் நவம்பர் 27, 1986 அன்று உத்தரபிரதேசத்தின் முராத்நகரில் பிறந்தார். ரெய்னா 19 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் அபாரமான விளையாட்டு வீரராக இருந்தார், அவரது எடுத்த சதங்களும் இரட்டை சதங்களும் அவரை இந்திய ஜூனியருக்கு அழைத்துச் சென்றன. அவர் இந்திய கிரிக்கெட் வீரர்களின் புதிய பரிமாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார்: இவர்
இடது கை நடுத்தர-வரிசை பேட்ஸ்மேன் மற்றும் அவ்வப்போது ஆஃப்-ஸ்பின் பந்துவீச்சாளர். இந்தியாவுக்கு கேப்டனாக இருந்த இரண்டாவது இளம் வீரர் இவர். கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். டெஸ்ட் ஆட்டங்களிலும் , ஒரு நாள் ஆட்டங்களிலும் டி20 உட்பட மூன்று சர்வதேச கிரிக்கெட் வடிவங்களிலும் சதம் அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் இவரே ஆவார். ஐபிஎல் 2010 இறுதிப் போட்டிகளுக்கு முன்னதாக பிசிசிஐயால் ரெய்னா "சிறந்த பீல்டர்" விருது பெற்றார். ரெய்னா 2011 உலகக் கோப்பையில் இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துசென்றதில் முக்கியமானவர். அங்கு அவர்கள் 28 வருட காத்திருப்புக்குப் பிறகு கோப்பையை வீட்டிற்கு கொண்டு வந்தனர்.
அவர் தனது டுவென்டி 20 வாழ்க்கையில் 6000 மற்றும் 8000 ரன்களை எடுத்த முதல் இந்திய வீரர், ஐபிஎல்லில் 5000 ரன்களை எட்டிய முதல் கிரிக்கெட் வீரர் மற்றும் அதிக கேட்சுகள் (107) என்ற சாதனையை படைத்த இளம் சாதனையாளராக வலம்வருபவர். ஐபிஎல்லில், கிறிஸ் கெயிலுக்குப் பிறகு இரண்டாவது, ஐபிஎல்லில் 100 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர். அவர் CLT20 (842)ரன்களில் அதிக ரன் எடுத்தவர், சாம்பியன்ஸ் லீக் T20 வரலாற்றில் அதிக அரைசதங்கள், மற்றும் ஐபிஎல் போட்டியில் பவர்பிளேயில் அதிக ரன்கள் என இவரின் வெற்றிப் பட்டியல் நீளும். மேலும் சுரேஷ் ரெய்னா 2017 இல் காசியாபாத் முனிசிபல் கார்ப்பரேஷனின் (ஜிஎம்சி) பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டார்.
அதே ஆண்டில், அவரது மகளின் முதல் பிறந்தநாளில், பெண்கள் அதிகாரமளிக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்ட கிரேசியா ரெய்னா அறக்கட்டளையை தொடங்குவதாக அறிவித்தார். ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸுடன் உறுதியாக இருந்து நம்ம சென்னைக்காக அசத்தியதால்
மக்கள் அவரை "சின்ன தல" என்று அழைத்தனர்.
2021 இல், ரெய்னா ஒரு எழுத்தாளராக முயற்சி செய்து தனது சுயசரிதையை வெளியிட்டார், "நம்புங்கள் - வாழ்க்கை மற்றும் கிரிக்கெட் எனக்கு என்ன கற்றுக் கொடுத்தது". இந்தியன் பிரீமியர் லீக்கின் 12 சீசன்கள் முழுவதும் அதிக ரன்களை குவித்ததற்காக அவர் மிஸ்டர் ஐபிஎல் என்றும் அழைக்கப்படுகிறார். மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்ற சில நிமிடங்களில், ஆகஸ்ட் 15, 2020 அன்று சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக ரெய்னா அறிவித்தார். விளையாட்டு துறையில் குறிப்பாக கிரிக்கெட்டில் சுரேஷ் ரெய்னாவின் பங்களிப்பை நாம் அனைவரும் அறிவோம். "போராட்டம் இல்லாத இடத்தில் பலம் இல்லை" என்று நீங்கள் சொன்னது போல். "நீங்கள் எவ்வளவு பெரியவர் என்பது அல்ல, நீங்கள் எவ்வளவு பெரிதாக விளையாடுகிறீர்கள் என்பதுதான்." எங்கள் மதிப்பிற்குரிய வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், டெக்னாலஜி மற்றும் அட்வான்ஸ்டு ஸ்டடீஸிலிருந்து கௌரவ டாக்டர் பட்டம் பெற மிக மிக தகுதியான , திறமையும் அடக்கமும் கொண்ட திரு. சுரேஷ் ரெய்னாவை அழைப்பதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.
                        



        
        
        
        
        
                        
                        
                        
                        
                        
        
        
        
        
        