“வந்தது நீயா” தொடரின் மூலம் வியப்பூட்டும் யதார்த்தங்களின் திகிலும், சுவாரஸ்யமும்

“வந்தது நீயா” தொடரின் மூலம் வியப்பூட்டும் யதார்த்தங்களின் திகிலும், சுவாரஸ்யமும்
“வந்தது நீயா” தொடரின் மூலம் வியப்பூட்டும் யதார்த்தங்களின் திகிலும், சுவாரஸ்யமும்
“வந்தது நீயா” தொடரின் மூலம் வியப்பூட்டும் யதார்த்தங்களின் திகிலும், சுவாரஸ்யமும்
“வந்தது நீயா” தொடரின் மூலம் வியப்பூட்டும் யதார்த்தங்களின் திகிலும், சுவாரஸ்யமும்
“வந்தது நீயா” தொடரின் மூலம் வியப்பூட்டும் யதார்த்தங்களின் திகிலும், சுவாரஸ்யமும்

“வந்தது நீயா” தொடரின் மூலம் வியப்பூட்டும் யதார்த்தங்களின் திகிலும், சுவாரஸ்யமும் கலந்த மாபெரும் கதையை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கும் கலர்ஸ் தமிழ்

சென்னை, 30 மார்ச் 2021: தமிழ்நாட்டின் மிக இளமையான, முன்னணி பொது பொழுதுபோக்கு அலைவரிசையான கலர்ஸ் தமிழ், இதன் புராதன, வியப்பூட்டும் ஃபேண்டஸி கதை தொடர்களுக்காக குறிப்பாக, பெரும் வெற்றி பெற்ற நாகினி நெடுந்தொடருக்காக இலட்சக்கணக்கான ரசிகர்களின் பேராதரவை பெற்றிருக்கிறது. இந்த அலைவரிசை, நாகினி 5-ன் தொடர் நிகழ்வாக வந்தது நீயா நெடுந்தொடரை தொடங்குவதன் மூலம் இதனை இன்னும் அடுத்த உயர்நிலைக்கு எடுத்துச்செல்ல திட்டமிட்டிருக்கிறது. பாலாஜி டெலிஃபிலிம்ஸ் – ன் ஏக்தா கபூர் தயாரிப்பில் வெளிவரும் இந்நொடுந்தொடர், நாகினியின் அபூர்வமான உலகத்தை நமக்கு மீண்டும் உயிரோட்டமாக வழங்கவிருக்கிறது. என்றும் நிலைத்து நீடிக்கும் அதிசக்தி வாய்ந்த நபர்களுக்கிடையிலான காதலையும், ரொமான்ஸையும் இது சுவைபட சித்தரிக்கிறது. மசோரி என்ற நவீன நகரத்தில் நடைபெறுகின்ற இந்த நிகழ்வுகள் இதற்கு முன்பு பார்த்திராக அளவுக்கு அதிக மர்மத்தையும், திடுக்கிடும் நிகழ்வுகளையும், அற்புதமான கதை பின்னணியையும் கொண்டு பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்வது நிச்சயம். 2021 ஏப்ரல் 3 ஆம் தேதி, தொடங்குகின்ற “வந்தது நீயா” நெடுந்தொடரானது, கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் ஒவ்வொரு வாரமும், திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.

நாகினி மற்றும் கழுகிற்கு இடையே நடைபெறும் ஒரு விரும்பத்தகாத திருமணத்திற்குப் பிறகு இரத்தம் குடிக்கும் ஒரு காட்டேரியாக அளவற்ற சக்தியினை கொண்டிருக்கும் ரேஹன் சிங்காரம் (ஹர்ஷ் ராஜ்புத் நடிப்பில்) என்ற குழந்தை அவர்களுக்குப் பிறக்குமாறு சபிக்கப்படுகின்றனர். இவனைச் சுற்றி கலகமும், குழப்பமும், அழிவும் ஏற்படும் என்ற சாபமும் ஆட்டிப்படைக்கிறது. அவனது சக்தியின் மூல ஆதாரத்தை அடையாளம் காண முயற்சிக்கும் ரேஹன், அவனது வாழ்க்கையில் பாதி தேவதை மற்றும் பாதி மானுட நபராக திகழும் பிரியா (கிருஷ்ணா முகர்ஜி நடிப்பில்) சந்திக்க நேரிடுகிறது. எனினும், அவளது ஆற்றல் பற்றி அறியாதவனாகவே ரேஹன் இருக்கிறான். தங்களது சக்தியின் பின்னாலுள்ள ரகசியத்தை கண்டறிவதற்காக அவர்களது உறவின் துரதிருஷ்டவசமான அம்சத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ள ஒரு யுத்தத்தில் அவர்கள் இருவரும் ஈடுபடுகின்றனர். ஒருவர் மற்றொருவரிடமிருந்து பிரிந்து செல்லுமாறு அவர்களை செய்கின்ற வரலாறு திரும்பவும் நிகழுமா? அல்லது ஒருவர் மற்றொருவரோடு இன்னும் மிக நெருக்கமாக அவர்கள் வருவதற்கு அது உதவுமா?

வியப்பூட்டும் இந்த உலகம் நம் கண்களுக்கு முன்னே விரிவதை கண்டு மகிழ 2021 ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் தொடங்கி ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையிலிருந்து தொடங்கி சனிக்கிழமை வரை மாலை 6.30 வரை ஒளிபரப்பாகும் வந்தது நீயா நெடுந்தொடரை மறவாமல் கலர்ஸ் தமிழ் அலைவரிசையை டியூன் செய்யுங்கள். அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1555), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை கிடைக்கப்பெறுகிறது.