ஆண்களுக்கான டென்பின் பந்து வீச்சு போட்டி சென்னையில் நடைபெறுகிறது
ஆண்களுக்கான டென்பின் பந்து வீச்சு போட்டி சென்னையில் நடைபெறுகிறது
தமிழ்நாடு டென்பின் பந்துவீச்சு சங்கம் ஆண்களுக்கான மாநில தரவரிசையிலான டென்பின் பந்துவீச்சு போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. (ஏப்ரல்-7) துவங்கியுள்ள இந்த போட்டி வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வரை சென்னை எழும்பூர் மார்ஷல் சாலையில் உள்ள டியூ பவுலில் (DU Bowl) நடைபெறுகிறது
மொத்தம் 32 ஆண் பந்துவீச்சாளர்கள் இந்த போட்டியில் பங்கேற்கின்றனர். 32 போட்டியாளர்களும் முதல் சுற்றில் ஆறு விளையாட்டுகளில் பந்து வீசுகிறார்கள். முதல் சுற்றில் உள்ள ஆறு விளையாட்டுக்களிலும் ஒட்டுமொத்த பந்துகள் புள்ளிகளின் அடிப்படையில், வரிசைப்படி அடுத்தடுத்த இடம் பெற்ற 16 பந்துவீச்சாளர்கள் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறுவார்கள்.
இரண்டாவது சுற்றில் உள்ள ஆறு விளையாட்டுக்கள் கொண்ட ஒரு கேமில் இந்த 16 பந்துவீச்சாளர்கள் பந்து வீசுவார்கள் முதல் சுற்று மற்றும் இரண்டாவது சுற்றில் உள்ள 12 விளையாட்டுக்களில் விழும் ஒட்டுமொத்த பந்துகளின் அடிப்படையில், வரிசைப்படி முதலிடம் பெற்ற 8 பந்துவீச்சாளர்கள் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறுவார்கள் .
இந்த 8 பந்து வீச்சாளர்களும் மூன்றாவது சுற்றில் ஆறு விளையாட்டுகள் கொண்ட ஒரு கேமில் பந்து வீசுகிறார்கள் 1, 2 மற்றும் 3வது சுற்றுக்களில் உள்ள மொத்தம் 18 விளையாட்டுகளின் அடிப்படையில் வரிசைப்படி முதலிடம் பெற்ற நான்கு பந்துவீச்சாளர்கள், ‘நாக் அவுட்’ சுற்றுக்கு முன்னேறுவார்கள். இந்த நாக் அவுட் சுற்றில் அரையிறுதி போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டிகள், 3ல் எது சிறந்தது (Best Of 3) என்கிற வடிவத்தில் விளையாடப்படும்.
தரவரிசைப் புள்ளிகள் முதல் 16 பந்து வீச்சாளர்களுக்கு வழங்கப்படும்.. மாநில தரவரிசை நிகழ்ச்சிகளில் வழங்கப்படும், இந்த வருடம் நடைபெறுகின்ற மாநில தரவரிசை நிகழ்ச்சிகளில் பந்து வீச்சாளர்களால் பாதுகாக்கப்படும் இந்த தரவரிசை புள்ளிகள், இந்த வருட இறுதியில் நடைபெற இருக்கும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கும் போட்டியாளர்களை தேர்வு செய்வதற்கு மதிப்பிட பயன்படுத்தப்படும்.