ஆசிய தடகள போட்டி வீராங்கனைக்கு பரிசளிப்பு விழா

ஆசிய தடகள போட்டி வீராங்கனைக்கு பரிசளிப்பு விழா

கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற 23 வது ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற திருச்சிராப்பள்ளியை சேர்ந்த செல்வி. கோமதி மாரிமுத்து அவர்களுக்குப் பள்ளியின் சார்பில் ரூ.3 லட்சம் காசோலையைப் பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டது.

ஆலம்பக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியின் விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த மாணவ, மாணவியர்களுக்குப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டிப் பேசிய செல்வி. கோமதி மாரிமுத்து அவர்கள் மாணவ மாணவியர்களைக் கல்வியுடன் விளையாட்டிலும் கவனம் செலுத்தி சாதனைகள் படைக்க அறிவுரை வழங்கினார். பின்னர் கல்வி மட்டுமின்றி விளையாட்டு ஓவியம், நாட்டியம், இசை என அனைத்து துறைகளிலும் ஊக்கமளித்து தலைசிறந்த மாணவ - மாணவியர்களை உருவாக்கி வரும் வேலம்மாள் வித்யாலயாவின் சேவையைப் பாராட்டினார்.