நம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா
நம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா
ஐபிஎல் தொடரில் 3 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, இந்த சீசன் மிகவும் மோசமான சீசனாக அமைந்துள்ளது. துவக்கத்தில் சிறப்பாக விளையாடி மும்பை அணியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டம் போகப்போக உற்சாகம் இழந்தது. மொத்தம் விளையாடிய 10 போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்று, புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. பிளே-ஆப் சுற்றுக்கான வாய்ப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது.
இந்நிலையில், ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சென்னை வீரர்களை தட்டியெழுப்பி உற்சாகப்படுத்தும் வகையிலான இடுகையை பகிர்ந்துள்ளார். ‘நம்மால் வெல்ல முடியும், நாம் வெல்ல வேண்டும், நாம் வெல்வோம்’ என ஜடேஜா கூறி உள்ளார்.
இதன்மூலம் பிளே ஆப் சுற்றில் இடம்பெற அடுத்து வரும் போட்டிகளில் வீரர்கள் தொடர்ந்து போராடுவார்கள் என சி.எஸ்.கே. ரசிகர்களுக்கு அவர் உறுதியளித்திருக்கிறார். எனவே, அடுத்து வரும் போட்டியில் சென்னை அணியின் வழக்கமான அதிரடியை பார்க்கலாம்.