தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனாதொற்று உறுதி

தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனாதொற்று உறுதி

கொரோனா தொற்று எண்ணிக்கை 834 ஆக அதிகரித்துள்ளது. இன்று இரவு 50 ஆயிரம் ரேபிட் கிட் வருவதால் ஸ்க்ரீனிங் டெஸ்ட் தொடங்க உள்ளதாக பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

நேற்றுவரை நோய்த்தொற்று உறுதியானது 738 பேர். இன்று நோய்த்தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 96.

 இன்று நோய்த்தொற்று உறுதியான 96 பேரில் 84 பேர் ஒரே தொற்று உள்ளவர்கள். 12 பேரில் 3 பேர் சுயமாக மாநிலங்களுக்கிடையே பயணம் செய்தவர்கள். 9 பேர் நோய்த்தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். அதில் ஒருவர் தனியார் மருத்துவர்.

ஒரே தொற்று, ஒரே குழுவாக பயணம் செய்தவர்கள் எண்ணிக்கை 1480. முதலில் 1103 ஆக இருந்தது. அரசின் வேண்டுகோளை ஏற்று தங்களை சோதனைக்கு பலரும் உட்படுத்திக்கொண்டதால் படிப்படியாக அந்த எண்ணிக்கை அதிகரித்து 1480 ஆக இருக்கிறது. இந்த 1480 பேரில் நேரடியாகச் சென்று வந்தவர்களில் நோய்த்தொற்று உறுதியானது 763 பேர். 1480 பேரில் 926 பேருக்கு நோய்த்தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.

 தயவுசெய்து நான் பொதுமக்களை கேட்டுக்கொள்வது, இந்த நோயின் தீவிரம் யாருக்குமே தெரியவில்லை. நோய் பல்வேறு விதத்தில் பரவுகிறது. உலக அளவில் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதத்தில் நோயின் தாக்கம் உள்ளது. தயவுசெய்து நாங்கள் சொல்வதைக் கடைப்பிடியுங்கள். அடிக்கடி கைகளைக் கழுவுங்கள். இடைவெளியைக் கடைப்பிடியுங்கள்”.

இவ்வாறு பீலா ராஜேஷ் தெரிவித்தார்.