டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி மாதம் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அதற்குள்ளாக தேர்தல் நடத்தி புதிய அரசை தேர்வு செய்ய வேண்டும். இதனால் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு எந்நேரமும் வெளியாகலாம் என எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

இந்தநிலையில் டெல்லி சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியார்களிடம் தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தேதி விவரம்

வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 14-ம் தேதி

வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள்: ஜனவரி 21

வேட்புமனு பரிசீலனை: ஜனவரி 22-ம் தேதி

வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாள்: ஜனவரி 24-ம் தேதி

தேர்தல் தேதி: பிப்ரவரி 8-ம் தேதி

வாக்கு எண்ணிக்கை: பிப்ரவரி 11-ம் தேதி