ஜனவரி 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடு: தேர்தல் கமிஷன்

ஜனவரி 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடு: தேர்தல் கமிஷன்

தமிழகத்தில் ஜனவரி 20ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

தமிழகத்தில் 2021 ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், ஜனவரி20ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். முன்னதாக ஜன.,15ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

நவம்பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அன்றைய தினத்திலிருந்து டிசம்பர் 15ம் தேதி வரை வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது