சென்னையில் கொலை.. ஒடிசாவில் சடலம் மறைப்பு

சென்னை: அந்தமான் பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் நியாமத் அலி, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத மூன்று நபர்களால் சென்னையில் கொலை செய்யப்பட்டார். பின்னர் அவரது உடல் ஒடிசாவில் உள்ள ஒரு ஏரியில் வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, கொலை செய்ததாகக் கூறப்படும் மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நியாமத் அலியின் உடலைக் கைப்பற்றும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.