“லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு”
இயக்குநர் தயாள் பத்மநாபனின் புதிய திரைப்படம் இன்று தொடக்கம்!
மீண்டும் ஒரு த்ரில்லர் கதையுடன் இயக்குநர் தயாள் பத்மநாபன்;
K.V. சபரீஷ் மற்றும் தயாள் பத்மநாபன் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு துவக்கம்;
உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்ட திரைக்கதைகளால் எப்போதும் பாராட்டைப் பெற்ற இயக்குநர் தயாள் பத்மநாபன், தற்போது “லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு” என்ற தலைப்பில் உருவாகும் தனது புதிய படத்தின் படப்பிடிப்பை இன்று சென்னையில் பூஜையுடன் துவக்கியுள்ளார்.
இந்த படத்தை 2M Cinemas சார்பில் K.V. சபரீஷ் அவர்கள் தயாரிக்கிறார். இணை தயாரிப்பாளராக D Pictures சார்பில் தயாள் பத்மநாபன் இணைந்துள்ளார்.
இந்தப் படம், "லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு” என்ற உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது. ஒரு பத்திரிகையாளர் மர்மக் கொலை வழக்கின் பின்னணியில் நடந்த அரசியல், சினிமா மற்றும் ஊடக கலவையை நவீன கண்ணோட்டத்தில் பிரதிபலிக்கும் விதமாக இப்படம் அமைந்துள்ளது.
இயக்குநராகவும், இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றும் தயாள் பத்மநாபன், சமீபத்தில் பெற்ற “Best Director Award” (Tamil) வெற்றியின் வெள்ளத்தில், இன்னொரு வித்தியாசமான முயற்சியாக இந்தப் படத்தை இயக்குகிறார்.
படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா, லிஸ்ஸி ஆன்டனி, சரவணன், லொள்ளு சபா மாரண், இலவரசு மற்றும் கவிதா பாரதி ஆகியோர் நடித்துள்ளனர்.
இயக்குநர் தயாள் பத்மநாபன் கூறியதாவது:
“இது ஒரு சாதாரண குற்றக் கதை அல்ல. இது தமிழ் சினிமா வரலாற்றில் நடந்த உண்மைச் சம்பவத்தை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பதிவு செய்கிறது. எங்கள் தயாரிப்பாளர் K.V. சபரீஷ் அவர்களின் ஆதரவால், இந்தப் படம் ஒரு வலிமையான கலை மற்றும் உண்மைச் செய்தி கலந்த படைப்பாக மாறுகிறது, என்றார்”.
படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கியுள்ளதுடன், தொடர்ந்து சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் தீவிரமாக நடைபெற உள்ளது.
“லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு” விரைவில் ரசிகர்களைச் சந்திக்க வருகிறது.
தொழில்நுட்பக் குழு :
தயாரிப்பு நிறுவனம்: 2M Cinemas
தயாரிப்பாளர்: K.V. சபரீஷ்
இணை தயாரிப்பாளர்: தயாள் பத்மநாபன் (D Pictures)
கதை & இயக்கம்: தயாள் பத்மநாபன்
திரைக்கதை & வசனம் : கவிதா பாரதி & தயாள் பத்மநாபன்
ஒளிப்பதிவு: M.V. பனீர்செல்வம்
படத்தொகுப்பு : V. பூபதி
இசை & பின்னணி இசை: தர்புகா சிவா
தயாரிப்பு வடிவமைப்பு: அன்பு
மேக்கப்: குப்புசாமி
ஆடை வடிவமைப்பு: ரமேஷ்
தயாரிப்பு நிர்வாகி: மரியப்பன்
மக்கள் தொடர்பு : ரேகா
m Cinemas K.V. Sabareesh presents
Filmmaker Dayal Padmanabhan Directorial
Vetri starrer “Lakshmikanthan Kolai Vazhakku” shooting starts with pooja ceremony
Every region has a few real-life incidents that continue to evoke curiosity, excitement, and a compelling urge to revisit them through research and storytelling. Among such unforgettable events, the murder of a celebrated journalist decades ago, and the sensational involvement of iconic Tamil cinema personalities, remains one that once shook the entire nation.
Over the years, many creators have attempted to recreate this intriguing chapter through fictional narratives, yet the endeavor remained incomplete. Now, a team of passionate filmmakers has embarked on realizing this long-awaited cinematic vision.
The much-anticipated film ‘Lakshmikanthan Kolai Vazhakku’ began its shoot today (November 5) with a traditional pooja ceremony, attended by the cast, crew, and well-wishers from the industry. The film stars Vetri, Rangaraj Pandey, and Brigida in the lead roles.
Produced by K.V. Sabareesh under the banner of 2m Cinemas, the film is written and directed by Dayal Padmanabhan, who also co-produces under his home banner D Pictures. Known for his critically acclaimed and award-winning works across national and international circuits, Dayal Padmanabhan brings his creative finesse to this gripping narrative.
Speaking about the project, Producer K.V. Sabareesh shares, “It’s a project that many have dreamt of making, and I feel privileged to be realizing it now. Dayal Padmanabhan has taken meticulous care in drawing inspiration from the real-life incident while crafting an engaging fictional screenplay. The people and events remain rooted in reality, but presented with cinematic appeal and entertainment value.”
Director & Co-Producer Dayal Padmanabhan adds, “This has been a dream close to my heart for a long time, and I’m delighted that it’s finally taking shape. We commenced shooting today with a pooja ceremony, marking a significant beginning. I’m thankful to producer K.V. Sabareesh for backing this project with such conviction. While we prefer to keep details under wraps for now, audiences can expect a deeply engrossing and surprising experience.”
The film’s ensemble cast also includes Saravanan, Lizia Antony, Lollu Sabha Maran, Ilavarasu, and Kavitha Bharathi, among others.
The technical crew features M.V. Panneerselvam as the cinematographer and Darbuka Siva composing the songs and background score. Anbu heads the production design, Kuppusamy manages make-up, Ramesh designs costumes, and Mariappan serves as production executive. Rekha handles PR responsibilities.
The entire shooting schedule is planned across Chennai and its captivating locales, promising a visual experience as compelling as its subject.




