பொங்கல் பரிசுத் தொகுப்பை 2020 ஜனவரி 9-ஆம் தேதி முதல் வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது
தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பொங்கல் பரிசு மற்றும் ரொக்கத் தொகை ரூ. 1000 வழங்கப்பட உள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சா்க்கரை, 20 கிராம் உலா் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்புத் துண்டு ஆகியவை இடம்பெற்றிருக்கும். இதனுடன் ரூ. 1000 ரொக்கமும் வழங்கப்படும்.
இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ஏதுவாக ஜனவரி 10-ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறையில்லை என்று தமிழக அரசு சனிக்கிழமை அறிவித்துள்ளது. 2-ஆவது வெள்ளிக்கிழமையான 10-ஆம் தேதிக்குப் பதிலாக 16-ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.