இந்தியாvsமேற்கிந்திய தீவு தொடரை கைப்பற்றுமா இந்திய அணி?

இந்தியாvsமேற்கிந்திய தீவு தொடரை கைப்பற்றுமா இந்திய அணி?

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3வது டி-20 போட்டி இன்று மும்பையில் நடைபெறுகிறது. இதில் வெற்றிபெறும் அணி கோப்பையை கைப்பற்றும் என்பதால் இப்போட்டி மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் மூன்று போட்டிகளை கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றிபெற்ற போதும், இரண்டாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் பதிலடி கொடுத்தது. இதனால், 1-1 என தொடரில் சமநிலை எட்டப்பட்டது.

இந்நிலையில், கடைசி டி-20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில், இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. கோலி தலைமையிலான இந்திய அணியில், லோகேஷ் ராகுல், ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கின்றனர். ஆனால், தொடக்க வீரர் ரோஹித் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறார். இருந்த போதும், சொந்த ஊரில் நடைபெறும் போட்டியில் ரோஹித் அணிக்கு பலம் சேர்ப்பாரா என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளையில், அதிரடி பேட்ஸ்மேன்களை கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியை இந்திய பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்து எளிதாக இருக்கப்போவதில்லை. குறிப்பாக, ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக பொல்லார்டு ஆடி வருவதால் வான்கடே மைதானத்தின் தன்மையை நன்கு அறிந்திருப்பார்.

மேலும், இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணியே கோப்பையை கைப்பற்றும், எனவே, இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.