``பசுமை பட்டாசு கூட வெடிக்க வேண்டாமே..!'' - காற்று மாசு குறித்து ஜவடேகர் வேதனை
இந்தியாவில் தீபாவளி, தசாரா போன்ற பண்டிகை காலங்களில் வானில் வண்ணங்களை தெளிக்கும் பட்டாசுகள் வெடிப்பது வழக்கம். பண்டைய காலம் தொட்டு பின்பற்றிவரும் கலாசாரம் என்றாலும் இதனால் சுற்றுச்சூழல் மாசுபாடு காற்று மாசுபாடு ஏற்படுகிறது.
இந்நிலையில் டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "பண்டிகை காலங்களில் பசுமை பட்டாசுகளை வெடிப்பதை கூட பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். பட்டாசுகளை வாங்க வேண்டாம் என்று குழந்தைகள் உங்கள் பெற்றோர்களிடம் எடுத்துக்கூறுங்கள். பண்டிகையை கட்டாயம் கொண்டாட வேண்டும் என்றால் மட்டும் பசுமை பட்டாசுகளை வெடியுங்கள்.
மேலும், வாகனங்கள் கக்கும் புகையினால் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. இந்தியாவில் பிஎஸ் -6 வாகனங்கள் அறிமுகமானால் வாகன மாசுபாட்டில் 80 சதவீதம் குறையும், தலைநகர் டெல்லியில் காற்று தர கண்காணிப்பு மையத்தை அமைப்பதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி" எனக் கூறினார்.
டெல்லியை சேர்ந்த 6 முதல் 14 மாததுக்குட்பட்ட 3 குழந்தைகள் சார்பில் 2015-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் டெல்லியில் பட்டாசு வெடிப்பதினால் நரம்புத் தளர்ச்சி, ஆஸ்துமா, உறுப்புகள் செயலிழப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாகவும் இதன் காரணமாக இந்தியா முழுவதும் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டது.
இந்த வழக்கில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் சில நிபந்தனைகளுடன் பட்டாசு விற்பனை மேற்கொள்ளலாம் என தீர்ப்பளித்து. அதிக மாசு மற்றும் சத்தம் ஏற்படுத்தக்கூடிய பட்டாசுகளுக்கு தடை விதித்தது. மேலும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டது.
இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதமாக தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் பசுமை பட்டாசுகளை கண்டுபிடித்தது. இது பார்ப்பதற்கு வழக்கமான பட்டாசு போலவே இருக்கும். பசுமை பட்டாசு வெடிக்கும் போது குறைவான சத்தமும், மாசையும் வெளிப்படுத்தும் எனக் கூறப்படுகிறது. இந்த வருடம் மே மாதத்தில் பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் அனுமதித்த