விரைவில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு
ஆதார் அட்டையுடன் கிட்டத்தட்ட அனைத்து ஆவணங்களையும் இணைத்துவிட்ட நிலையில் வாக்காளர் அட்டையை மட்டும் இணைக்க அரசும், அரசியல் கட்சிகளும் ஆழ்ந்த யோசனையில் உள்ளன. இந்த இரண்டையும் இணைத்துவிட்டால் கள்ள ஓட்டு சாத்தியமே இல்லை என்பதால் தான் இந்த யோசனை இந்த நிலையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு சட்டரீதியான ஆதரவு கேட்டு தேர்தல் ஆணையம் அனுப்பிய பரிந்துரையை சட்ட அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது