டிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு..!!
டிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தேதி அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்து கொண்டுள்ளனர். அதிமுக சார்பில் விரைவில் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்ட்டது .
இதையடுத்து டிசம்பர் 13 ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் டிசம்பர் 2 ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.