தமிழகத்தின் 34-வது மாவட்டமாக இன்று உதயமாகிறது கள்ளக்குறிச்சி

தமிழகத்தின் 34-வது மாவட்டமாக இன்று உதயமாகிறது கள்ளக்குறிச்சி
தமிழகத்தின் 34-வது மாவட்டமாக இன்று உதயமாகிறது கள்ளக்குறிச்சி
தமிழகத்தின் 34-வது மாவட்டமாக இன்று உதயமாகிறது கள்ளக்குறிச்சி

தமிழகத்தின் 34-ஆவது மாவட்டமாக கள்ளக்குறிச்சி இன்று உதயமாகிறது.‌கள்ளிக்குறிச்சியின் புதிய மாவட்ட துவக்‌க விழா இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கள்ளக்குறிச்சி மாவட்‌டத்தின் நிர்வாகப் பணிகளை தொடங்கி வைக்‌கவுள்ளார்.

அதே விழாவில், அரசின் நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு முதல்வர் பழனிசாமி வ‌ழங்குகிறார். இந்த விழாவில், துணை முதலமைச்சர்‌ ஓ.பன்னீர்செல்‌வம், அமைச்சர்கள் சண்முகம், உதயகுமார் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர். கடந்த ஜனவரியில் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.