கல்யாணம் வேணாம்.. மறுத்த 38 வயது மகன்.. மனநல மருத்துவரிடம் கூட்டிச் சென்ற தாய்.. தெரியவந்த ட்விஸ்ட்

கல்யாணம் வேணாம்.. மறுத்த 38 வயது மகன்.. மனநல மருத்துவரிடம் கூட்டிச் சென்ற தாய்.. தெரியவந்த ட்விஸ்ட்
கல்யாணம் வேணாம்.. மறுத்த 38 வயது மகன்.. மனநல மருத்துவரிடம் கூட்டிச் சென்ற தாய்.. தெரியவந்த ட்விஸ்ட்
கல்யாணம் வேணாம்.. மறுத்த 38 வயது மகன்.. மனநல மருத்துவரிடம் கூட்டிச் சென்ற தாய்.. தெரியவந்த ட்விஸ்ட்

பெய்ஜிங்: சீனாவில் ஒரு தாய், 38 வயதாகியும் திருமணம் செய்யாமல் சுற்றும் தனது ஒரே மகனை மனநல மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா என்று சோதிக்குமாறு கேட்டிருக்கிறார். தாயாரின் விருப்பத்திற்காக மருத்துவமனைக்கு சென்று வந்த மகன் சொன்ன பதில் தான் ஆச்சர்யமானது மட்டுமல்ல, அந்த தாய்க்கு சோகத்தையும் தந்திருக்கிறது.

இந்தியாவில் தான் குறிப்பிட்ட வயதில் திருமணம் செய்து கொள்ளாவிட்டால் பெற்றோரிடம் இருந்து அழுத்தம் வருகிறது. 80களில் பிறந்த பலருக்கு கல்யாணம் ஆகி, குழந்தையே திருமண வயதை எட்டிவிட்டது. ஆனால் 90களில் பிறந்த பலர் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார்கள். காரணம் திருமணத்திற்கு பெண் கிடைப்பதில்லை. தனக்கு ஏற்ற சரியான வாழ்க்கை துணை கிடைக்காமல் 90ஸ் கிட்ஸ்கள் சுற்றுகிறார்கள்.

வாழ்க்கையில் செட்டில் ஆன பின்னரே திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் திருமணத்தை தள்ளிப்போட்ட பலர் 30 வயதை கடந்த பின்னர், வயதாகிவிட்டதாக புறக்கணிக்கப்படும் சம்பவங்களும் இந்தியாவில் அதிகமாக நடக்கிறது. இந்தியாவில் திருமண வரன் மீதான ஆர்வம் அதிகரித்திருப்பதால் தான், பல்வேறு மேட்ரிமோனியல் இணையதளங்கள் முளைத்திருக்கின்றன. அது மிகப்பெரிய பிசினஸ் ஆகவும் மாறிவிட்டது.

சமூக அழுத்தம் 
சரி விஷயத்துக்கு வருவோம்.. இந்தியாவில் 25 முதல் 30 வயதுக்குள் உள்ள பல ஆண்கள் எதிர்கொள்ளும் கேள்வி திருமணம் தான். 30 வயதை கடந்துவிட்டால் திருமணம் இன்னும் நடக்கவில்லையா என்று தான் பெற்றோருக்கு சமூகத்தில் அழுத்தம் வரும். பெற்றோரும் அந்த அழுத்தத்தை பிள்ளைகளிடம் காண்பிப்பார்கள். அதுபோலத்தான் என்னவோ சீனாவில் ஒரு தாய் 38 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாத தனது ஒற்றை மகனை மனநல மருத்துவரிடம் அழைத்து சென்று சோதித்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானது.


மருத்துவ பரிசோதனை 
சவுத் சைனா மார்னிங் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியின் படி, 2020 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு சந்திர புத்தாண்டிலும் (நம்மூர் பொங்கல் போல அங்கு பிரபலமான பண்டிகை) ஒரு மனநல மருத்துவமனையில் பரிசோதனைக்காக அந்தப் பெண் தனது மகனை அழைத்துச் செல்கிறார்.

மத்திய சீன மாகாணமான ஹெனானைச் சேர்ந்த வாங் என்ற குடும்பப்பெயர் கொண்ட அவர் சமீபத்தில் அண்மையில் மருத்துவ பரிசோதனைக்கு சென்ற ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

மூளையில் பிரச்சனை 
சந்திர புத்தாண்டின் போது , இவரைத்தான் திருமணம் செய்யப்போகிறேன் என்று தன் மகன் அழைத்து வருவார் என்று நம்பிக்கொண்டிருந்த தாய்க்கு, அந்த ஆசை நிறைவேறாத காரணத்தால், மனநல மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். தன் மகனுக்கு மனதில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்றும் மூளையில் பிரச்சனையா என்று பாருங்கள் என்றும் மருத்துவரிடம் கேட்டிருக்கிறார் அந்த வெகுளித்தாய். தாயின் மனம் நோகடிக்கப்படக்கூடாது என்று விரும்பிய மகன், அவர் ஆசைப்படி ஒவ்வொரு ஆண்டும் மருத்துவமனைக்கும் சென்று வந்திருக்கிறார். கடந்த பிப்ரவரி 4 அன்று அவர் ஹெனான் மாகாண மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அம்மாவின் ஆசை 
இருப்பினும், இந்த முறை, எதிர்பாராத ஒன்று நடந்தது. மனநல மருத்துவர், வாங்கிடம் உங்களுக்கு உடம்பில் பிரச்சனை இல்லை. உங்கள் தாய்க்கு தான் பிரச்சனை உள்ளது. திருமணத்திற்கு வற்புறுத்தும் மனநிலையை உருவாக்கிவிட்டீர்கள் என்று கூறியிருக்கிறார். இதனிடையே வாங் இதுபற்றி கூறுகையில், திருமணம் செய்யக்கூடாது என்பது என் எண்ணம் இல்லை. நான் மிகவும் பிஸியாக இருக்கிறேன், சரியான நபரை சந்திக்கவில்லை. நான் திருமணம் செய்து கொள்ளாததால் என் அம்மாவால் தூங்க முடியவில்லை. அதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன் . என் அம்மாவின் ஆசைக்காகவே மனநல மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன்" என்றார்.