தமிழகமெங்கும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களின் பழுதடைந்த வீடுகளைச் சீரமைக்க 108 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும்
தமிழகமெங்கும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களின் பழுதடைந்த வீடுகளைச் சீரமைக்க 108 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும், அவர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகையினை உயர்த்தியும் அறிவித்துள்ள தமிழ்நாடு முதல்வருக்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பழுதடைந்த வீடுகளைச் சீரமைப்பது ஆறுதலை அளித்தாலும், தொப்புள்கொடி சொந்தங்களான ஈழத்தமிழர்களை சிறப்பு முகாம் உள்ளிட்ட அணைத்து முகாம்களுக்கும் வெளியே குடியமர்த்தி, நாம் தமிழர் கட்சியின் நீண்டகால கோரிக்கையையான “முகாம்களே இல்லாத தமிழ்நாட்டினை” உருவாக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமெனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
- சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி