இந்திய தூதரகத்தில் பாகிஸ்தானியர்கள் வன்முறை: மக்கள் பரபரப்பு
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து சமீபத்தில் மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. மேலும் ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரு பகுதிகளையும் யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது.
இந்நிலையில் நேற்று லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் அந்நாட்டில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து லண்டனில் உள்ள இந்திய தூதரகம் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.
இது குறித்து லண்டன் மேயர் ஷாதிக் கான் ’இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல்” என கருத்து தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்து மாதம், இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு பாகிஸ்தானியர்கள் இந்திய தூதரகத்தை தாக்கினர். இதை தொடர்ந்து தற்போது மீண்டும் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.