இலங்கைக்கு எதிரான டி20 போட்டி: நியூசிலாந்து கடைசி ஓவரில் த்ரில் வெற்றி!]
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் நியூசிலாந்து அணி கடைசி ஓவரில் இரண்டு பந்துகள் மீதமிருக்கும் நிலையில் திரில் வெற்றி பெற்றது.
நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அந்த அணியின் டிக்வெல்லா 39 ரன்களும் பெர்னாண்டோ 37 ரன்கள் அடித்ததை எடுத்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி 161 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து 162 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி கிராந்தோம் மற்றும் புரூஸ் ஆகியோர்களின் அதிரடி ஆட்டத்தால் 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மிக அபாரமாக பந்துவீசிய செளத்தி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்படார்.
இதனையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற நியூசிலாந்து தொடரை வென்றது. இரு அணிகளுக்கும் இடையிலாஅ 3வது டி20 போட்டி செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெறும்