கோயம்பேடு வியாபாரிகள் திடீர் போராட்டம்!!

கோயம்பேடு வியாபாரிகள் திடீர் போராட்டம்!!

இன்றைய தொழில்நுட்ப உலகில் ஆன்லைனில் கிடைக்காத பொருளே இல்லை என்ற நிலையில் காய்கறிகளையும் ஆன்லைனில் ஒருசில நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன. குறைந்த விலை, டோர் டெலிவரி போன்ற வசதிகளால் பொதுமக்கள் தற்போது ஆன்லைனில் காய்கறிகளை வாங்க தொடங்கிவிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 5 மணி அளவில் கோயம்பேடு காய்கறி வியாபார்கள் திடீர் போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயம்பேடு உரிமம் பெற்ற கோயம்பேடு காய்கறிகள் மொத்த வியாபாரிகள் சிலர் கூறியபோது, ‘நிஞ்ஜா கார்ட், உடான் போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் மொத்த விலைக்கு காய்கறியை வாங்கி அதனை தனது வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதாகவும், விற்பனை செய்தது போக மீதியிருக்கும் சுகாதாரமற்ற பழைய காய்கறிகளை கோயம்பேடு மார்க்கெட்டில் உரிமம் இல்லாத கடைகளிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாகவும், இதனால் உரிமம் உள்ள 2,200 வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

இதனை அடுத்து கோயம்பேட்டில் உள்ள 27 வியாபாரிகள் மற்றும் தொழிலாளர் சங்கங்கத்தினர் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.