அரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு

அரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழ அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும். மேலும், நஷ்டமடைந்த பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும்.

நிரந்தர தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.8,400 முதல் அதிகபட்சமாக ரூ.16,800 வரை தீபாவளி போனஸ் கிடைக்கும். மின் வாரியம், போக்குவரத்துக் கழகம், நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும்.

தமிழக அரசின் இந்த அறிவிப்பால் அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் 3 லட்சத்து 48 ஆயிரத்து 503 பேர் பலனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.