மராட்டியம், அரியானாவில் இன்று சட்டசபை தேர்தல்
மும்பை:மராட்டியம், அரியானா மாநிலங்களில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வருகிற 24-ந் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் போது அந்த மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது தெரிந்துவிடும்.
பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெறும் மராட்டிய மாநில சட்டசபைக்கும், பாரதீய ஜனதா ஆட்சி நடைபெறும் அரியானா சட்டசபைக்கும் இன்று (திங்கட்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. இரு மாநிலங்களிலும் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.