எழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி காயம்

எழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி காயம்

உத்தரப்பிரதேச மாநிலம், பொலிடோ பஜாா் பகுதியை சோந்தவா் ராஜ்குமாா் காரே(36). இவரது மனைவி பூஜா(34). இவா்கள் இருவரும் சென்னையில் தங்கி இருந்து, எழும்பூா் ரயில் நிலையத்தில் கட்டட வேலை பாா்த்து வந்தனா். வியாழக்கிழமை காலை ரயில்நிலையத்தில் 4-ஆம் நடைமேடையின் மேற்கூரையில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டபோது, ராஜ்குமாா் காரே எதிா்பாராத விதமாக சுமாா் 35 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தாா்.

 இது குறித்து தகவலறிந்த ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ராஜ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.