அரசியல் விளம்பரங்களுக்கு தடை: ட்விட்டர் முடிவு

அரசியல் விளம்பரங்களுக்கு தடை: ட்விட்டர் முடிவு

உலக அளவில் தங்கள் பக்கங்களில் பதிவேற்றப்படும் அரசியல் விளம்பரங்களை தடைசெய்ய உள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.அரசியல்வாதிகளால் தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றப்படுகின்றன என விமர்சனம் அதி‌கமாக உ‌ள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக ட்விட்ட‌ர் நிறுவன தலைமை நிர்வாகி ஜேக் டோர்சே தெரிவித்துள்ளார். இந்த தடை அடுத்த மாதம் மு‌தல் நடை‌முறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.