முதல் முறையாக டைபாய்டு காய்ச்சலுக்கு புதிய தடுப்பூசி அறிமுகம்
இப்போது கொசுக்களினால் பல கொடிய வகை நோய்கள் ஏற்படுகின்றன. டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்களால் உயிரிழந்தோர் பலர். அதுபோல வேறொரு உயிர்க்கொல்லி நோய் டைபாய்டு காய்ச்சல். இது சால்மொனெல்லா டைபி என்ற பாக்டீரியாவால் உருவாகிறது . வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் நடுத்தர மற்றும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில், குறிப்பாக மழை நேரங்களில் இந்த நோய்கள் அதிக அளவில் ஏற்படுகின்றன.. நாடு முழுவதும் 11 ஆயிரம் மக்கள் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அப்போது இந்த காய்ச்சலினால் உயிர் பலி விகிதம் 20 சதவீதம் அதிகரிக்ககூடும் என வல்லுநர்கள் தெரிவித்தனர். இந்தவேளையில் , கராச்சியில் மருத்துவ துறை மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று கொண்ட ஒரு விழாவில், 'டைபாய்டு தடுப்பூசி' அறிமுகப்படுத்தப்பட்டது. சுகாதாரத்துக்கான பிரதமரின் சிறப்பு உதவியாளர் ஜாபர் மிர்சா மற்றும் மாகாண சுகாதார அமைச்சர் அஸ்ரா ஃபசல் பெச்சுஹோ ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர் .