முழுமையாக நிரம்பிய பவானிசாகர் அணை : கரையோர கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை
பவானிசாகர்:தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையை பெற்றுள்ள ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை. தற்போது நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து தனது கொள்ளளவான 105 கனஅடியை முழுமையாக எட்டியுள்ளது. இதனால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காரணத்தால், கரையோர பகுதி கிராமங்களான கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி, நஞ்சைபுளியம்பட்டி, அடசப்பாளையம், மேவாணி, உள்ளிட்ட பகுதிகளுக்கு வருவாய்துறையினர் தண்டோர மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கரையோர பகுதி கிராம மக்கள் கரையோர பகுதியில் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ வேண்டாம் எனவும், பரிசல் இயக்க வேண்டாம் என்று வருவாய்துறையினர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.