உயர்வுடன் தொடங்கிய பங்குச் சந்தைகள்!
மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் இன்றுபுதிய உச்சத்துடன் தொடங்கியுள்ளது.வர்த்தக தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 218 புள்ளிகள் உயர்ந்து 41, 108 என்ற புதிய உச்சம் தொட்டது. இதேபோல்,தேசிய பங்குச்சந்தை 51 புள்ளி உயர்ந்து 12,125 என்ற புதிய உச்சம் எட்டியது.தற்போது, மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 190 புள்ளிகள் உயர்ந்து 41, 079 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி46 புள்ளிகள் உயர்ந்து 12,119 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கியதால் வர்த்தகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.