ஆசிய வில்வித்தை போட்டியில் தீபிகா குமாரி தங்கம் !!

ஆசிய வில்வித்தை போட்டியில் தீபிகா குமாரி தங்கம் !!

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் நடைபெற்ற 21வது ஆசிய வில்வித்தை போட்டியின் நேற்று நடந்த தனிநபர் போட்டியில், இந்தியாவின் தீபிகா குமாரி ,அங்கிதா பகத் ஆகியோர் மோதினார்கள். இதில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய தீபிகா குமாரி 6-0 என்ற கணக்கில் சக வீராங்கனை அங்கிதா பகத்தை எளிதில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். அங்கிதா பகத் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.