உள்ளாட்சி தேர்தலில் ஊரகப் பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்!!!
சென்னை: அவசர சட்டம் பிறப்பிப்பு... தமிழக உள்ளாட்சி தேர்தலில் ஊரகப் பகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நகர்புறங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் மூலமும், ஊரகப் பகுதிகளில் வாக்குச்சீட்டு முறையிலும் தேர்தல் நடத்தப்படும் என்று ஏற்கனவே மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் கிராம ஊராட்சி மன்ற உறுப்பினர், கிராம ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர், போன்றவைகளுக்கும் தேவை ஏற்பட்டால் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்திக் கொள்ளலாம் என சட்டத்திருத்தம் செய்யப்பட்டு ஆளுநர் ஒப்புதலுடன் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.