30 மினுட்ஸ்வித்அஸ்
30 மினுட்ஸ்வித்அஸ்
(30 MINUTES WITH US)
(வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 7:30 மணிக்கு)
சினிமா என்பது மிகப்பெரிய கடல் மாதிரி. இதில் வெற்றிபெறுவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. சினிமாவில் நுழைவதற்கு ஒரு லட்சம் பேர் ஆசைப்படலாம்.. ஆனால் இதில் ஆர்வத்துடன் நுழைபவர்கள் ஐம்பதாயிரம் பேர்தான். இதிலும் விடாமுயற்சியாக போராடி வாய்ப்பை பெறுகிறவர்கள் என்னவோ ஆயிரம் பேர் தான்.இப்படி சினிமாவில் சாதனை புரிந்தவர்களை,அவர்கள் கடந்து வந்த வெற்றிப்பயணத்தை முழுமையாக 30 நிமிடங்களில் சொல்லும் ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சிதான் 30 மினுட்ஸ்வித்அஸ் நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சியில் அந்தந்த வாரங்களில் வெளியாகின்ற படத்தின் இயக்குனர் அந்தப்படத்தின் கதாநாயகன், நாயகி, இசையமைப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினருடன் கலந்துகொண்டு அந்தப்படம் உருவானது எப்படி, அதை படமாக்க தாங்கள் பட்ட சிரமங்கள், நல்லது கெட்டது மற்றும் இந்தப்படத்தின் மூலம் புதிதாக தாங்கள் சொல்லவரும் விஷயம் என படத்தை பற்றிய சுவாரஸ்யமான செய்திகளை பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள்.
அந்தவகையில் இந்தவாரம் இசையமைப்பாளர் சி .சத்யா தான் பணியாற்றும் படம் குறித்து சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொள்ள இருக்கிறார்.இந்த நிகழ்ச்சி பெப்பர்ஸ் டிவியில் வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியை சுவைபட தொகுத்து வழங்குபவர் தொகுப்பாளர் காயத்ரி .